×

லண்டனில் பென்னி குக் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: லண்டனில் நிறுவப்பட்ட பென்னி குக் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகள், இங்கிலாந்து மகாராணி மறைவையொட்டி  ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக  அரசு வெளியிட்ட அறிக்கை: இங்கிலாந்து நாட்டில் கேம்பர்ளி நகரில், முல்லைப் பெரியாறு அணையை‌ உருவாக்கி  தென்தமிழ் நாட்டின் நீர் வளத்திற்கு வித்திட்ட கர்னல் ஜான் பென்னி குக்  திருவுருவச் சிலை நிறுவப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து நேற்று தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்பட்டுள்ள சிலையை திறந்து வைப்பதற்காக விரிவான ஏற்பாடுகளுடன் திறப்பு விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து மகாராணியார் மறைவையொட்டி சிலைத் திறப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு விட்டது. கேம்பர்ளி நகரில் நிறுவப்பட்ட சிலையை கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஜெயசீலன் மற்றும் எம்எல்ஏக்கள் கம்பம் ராமகிருஷ்ணன் தளபதி, மகாராஜன் மற்றும் கேம்பர்ளி தமிழ் பிரிட்டிஷ் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பார்வையிட்டனர்.இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post லண்டனில் பென்னி குக் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Benny Cook ,statue ,London ,Tamil Nadu ,Chennai ,Penny Cook ,Queen of England ,Tamil Nadu government ,
× RELATED மானாமதுரையில் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது