×

4041 கடிதம், 21,510 பக்கம், 54 தொகுதிகள் தொண்டர்களுக்கு கலைஞர் எழுதிய கடிதங்களின் தொகுப்பு: திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்

சென்னை: விருதுநகரில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவில் ‘‘கலைஞர் கடிதங்கள்” தொகுப்பு நூல்கள் வெளியிடப்படுகின்றன. இந்நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். கலைஞர் 1968 தொடங்கி 2018 வரையில், திமுக உடன்பிறப்புகளுக்கு எழுதியிருக்கிற 4041 கடிதங்களின் தொகுப்பு நூல்களை சீதை படிப்பகத்தின் உரிமையாளர் கொளரா ராஜசேகரன் பதிப்பித்துள்ளார். 21,510 பக்கங்களில் கலைஞர் எழுதிய அனைத்து கடிதங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. 54 தொகுதிகளாக அவை வெளிவந்துள்ளன. கலைஞர், தன் வாழ்­நாளில் எழுதி இருக்கிற இன்னும் பல்லாயிரம் பக்கங்களுக்கு நடுவே இவை ஒரு பகுதிதான். அத்­தனையும் செய்திகள். அன்றாட அரசியல் பற்றிய விமர்சனங்கள், கழகத்திற்குள்ளும் வெளியிலும் நடந்த செய்திகள் பற்றிய விளக்கங்கள்.சுருக்கமாய் சொன்னால் அந்நூல்கள் கலைஞரின் அரை நூற்றாண்டு ஆவணங்கள். வருகிற 15ம் தேதி, அண்ணா பிறந்தநாளன்று, விருதுநகரில் நடைபெற இருக்கும் திமுக நடத்தும் முப்பெரும் விழாவில் இந்நூல்களை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். திமுக பொது செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பெற்றுக் கொள்கிறார்….

The post 4041 கடிதம், 21,510 பக்கம், 54 தொகுதிகள் தொண்டர்களுக்கு கலைஞர் எழுதிய கடிதங்களின் தொகுப்பு: திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,DMK Triennial ,CHENNAI ,DMK Triennial Festival ,Virudhunagar ,Dinakaran ,
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...