×

கேம்சேஞ்சர் கதை மாற்றப்பட்டது: ஷங்கர் மீது கார்த்திக் சுப்புராஜ் குற்றச்சாட்டு

சென்னை: நான் சொன்ன கதையை அப்படியே எடுக்காமல் ‘கேம் சேஞ்சர்’ கதை மாற்றப்பட்டது என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் குற்றம் சாட்டியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதையைத்தான் ‘கேம் சேஞ்சர்’ என்கிற பெயரில் பான் இந்தியா படத்தை ஷங்கர் இயக்கினார். இந்த படத்தில் ராம் சரண், கியரா அத்வானி நடித்தார்கள். இந்த படம் ரூ.200 கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்தது. இது குறித்து கார்த்திக் சுப்புராஜிடம் கேட்டபோது அவர் சொன்னது: ஷங்கரின் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். அவரது படத்துக்கு நான் கதை எழுதுவேன் என யோசித்தும் பார்க்கவில்லை. அது எனக்கு கிடைத்த பெருமை. அப்படித்தான் அவரிடம் ஒரு ஐஏஎஸ் ஆபீசர் பற்றிய கதையை ஒன்லைனாக சொன்னேன். அதன் பிறகு அந்த கதை, வேறொரு உலகத்துக்கு சென்றுவிட்டது. அதில் நிறைய பேர் எழுதினார்கள். கதை, திரைக்கதை முற்றிலுமாக மாற்றப்பட்டது. இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

Tags : Karthik Supuraj ,Shankar ,Chennai ,Kartik Suppuraj ,Pan India ,
× RELATED திடீரென்று கிளாமருக்கு மாறிய ரஜிஷா விஜயன்