×

செங்குன்றம் அருகே ஓட்டல் ஊழியரிடம் செல்போன் பறிப்பு; 3 பேருக்கு வலை

புழல்: சோழவரம் அருகே ஆங்காடு பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (40). இவர், ஆவடியில் ஒரு தனியார் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். இந்நிலையில், செங்குன்றம் அருகே கும்மனூர் பைபாஸ் சாலையில்  இவர்  வந்தபோது, அங்கு நின்றிருந்த 3 மர்ம நபர்கள் கத்திமுனையில் வழிமறித்து, பணம் கேட்டு மிரட்டினர். அவர், பணம் தர மறுத்தார். மேலும், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், ஆத்திரமடைந்த  அவரை கத்தியால் சரமாரி தாக்கினர். பின்னர், அவரது சட்டைப் பையில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு 3 மர்ம நபர்களும் பைக்கில் ஏறி, அங்கிருந்து தப்பி சென்றனர். புகாரின்பேரில், சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்….

The post செங்குன்றம் அருகே ஓட்டல் ஊழியரிடம் செல்போன் பறிப்பு; 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Senggunram ,Ashokumar ,Angadhu Bhajanai Koil Street ,Cholavaram ,Avadi ,
× RELATED செங்குன்றம் வடகரை பகுதியில் அரசு...