×

ஷாருக்கான் ஓட்டலில் கலப்பட உணவு: பரபரப்பு புகார்

மும்பை: நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரி கானுக்குச் சொந்தமான மும்பையில் உள்ள டோரி என்ற ஆடம்பர உணவகத்தில் போலி பனீர் வழங்கப்படுவதாக யூடியூபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த உணவகத்தில் பனீரின் தூய்மை சோதனையில் தோல்வியடைந்ததாகக் கூறும் வீடியோவை யூடியூபர் சார்தக் சச்தேவ் வெளியிட்டுள்ளார். வீடியோவில், பிரபலங்களுக்குச் சொந்தமான உணவகங்களில் வழங்கப்படும் பனீரில் கலப்படம் உள்ளதா என சோதிக்க சச்தேவ் ஒரு உணவுப் பரிசோதனையை மேற்கொள்கிறார்.

ஒரு பாட்டில் அயோடினுடன் அவர் மும்பையில் உள்ள பிரபல உணவகங்களான விராட் கோலியின் ஒன்8 கம்யூன், ஷில்பா ஷெட்டியின் பாஸ்டியன், பாபி தியோலின் சம்ப்ளேஸ் எல்ஸ் போன்றவற்றுக்குச் செல்கிறார். இங்கிருந்து பெறப்பட்ட பனீர் மாதிரிகளில் அயோடின் சோதனையில் கருப்பு நிறம் தோன்றவில்லை. ஷாருக்கானின் டோரி எனும் உணவகத்தில்ல் சச்தேவ் இதே சோதனையை மேற்கொண்டபோது, அயோடின் கருப்பு நிறமாக மாறியது. இதனால், ஷாருக்கானின் உணவகத்தில் வழங்கப்பட்ட பனீர் போலியானது என்பது நிரூபணமானதாக யூடியூபர் அறிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறை விசாரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Shah Rukh Khan ,Mumbai ,Dori ,Gauri Khan ,
× RELATED ‘பிச்சைக்காரன்‘ பட வாய்ப்பை மிஸ்...