×

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சசிகலாவுடன் சந்திப்பு: இனிப்பு வழங்கி பிறந்தநாள் வாழ்த்து

ஒரத்தநாடு: ஒரத்தநாட்டில் சசிகலா, வைத்தியலிங்கம் நேற்று நேருக்கு நேர் சந்தித்து  கொண்டனர். அப்போது வைத்தியலிங்கத்திற்கு இனிப்பு வழங்கி சசிகலா பிறந்தநாள் வாழ்த்து கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு நகர செயலாளர் அலுவலகத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் நேற்று தனது  68வது பிறந்த நாளை ஆதரவாளர்களுடன் கொண்டாடினார். பின்னர் காரப்பட்டு கிராமத்தில் கட்சி  நிர்வாகி ஒருவரின் இல்ல திருமணத்திற்காக தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்றார். திருமண மண்டபம் அருகே வந்தபோது, மன்னார்குடியிலிருந்து ஒரத்தநாடு வழியாக தஞ்சாவூருக்கு  காரில் வந்த சசிகலாவை பார்த்ததும், வைத்திலிங்கம் காரை நிறுத்தி தனது ஆதரவாளர்களுடன் சசிகலாவை சந்தித்தார். பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது, தனக்கு பிறந்தநாள் என தெரிவித்தார். வைத்தியலிங்கத்தை பார்த்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய சசிகலா, தனது காரில் வைத்திருந்த இனிப்பை வழங்கினார்.  …

The post ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சசிகலாவுடன் சந்திப்பு: இனிப்பு வழங்கி பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : OPS ,Vidilingam Sasigala ,Orathanadu ,Sasigala ,Vaidyalingam ,Oathanadu ,Dinakaran ,
× RELATED போலீசார் மீது கல்வீச்சு: சிறுவன் உள்பட 5 பேர் கைது