×

விவசாய நிலங்களை பாதுகாக்க குமரியில் 50 கிலோமீட்டர் சூரியமின்வேலி

*அரசுக்கு பரிந்துரை : மாவட்ட வன அலுவலர் தகவல்நாகர்கோவில் :  குமரியில் வனவிலங்குகளிடமிருந்து விவசாய நிலங்களை பாதுகாக்க 50 கிலோமீட்டருக்கு சூரிய மின்வேலி அமைக்க மாவட்ட வனத்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குமரியில் 14 வகையான வனங்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் தொடக்க பகுதி என்பதுடன், இருபருவ மழை பெய்வதால் மிகவும் செழிப்பான மாவட்டம். யானைகள், புலி, சிறுத்தை, காட்டெருமை, காட்டுப்பன்றி, கரடி, கருமந்தி, தேவாங்கு, மிளா என பல வகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மாறிவரும் சூழலில் யானை வழித்தடங்கள் தனியார் எஸ்டேட்கள் உட்பட பல்வேறு காரணங்களால், அடைக்கப்பட்டு விட்டதால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள்  மலையில் இருந்து கீழே இறங்கி விவசாய நிலங்களை சேதப்படுத்துவதுடன் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை தாக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன. இதில் பயிர்கள் சேதமாவது மட்டுமின்றி, பல உயிர் சேதங்களும் நடைபெற்றுள்ளன. இதனையடுத்து வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் ெவளியே வருவதை தடுக்க முன்பு சூரிய மின்வேலி அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது அவை சேதமடைந்து விட்டன. இந்நிலையில், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும், பூதப்பாண்டியை அடுத்து தெள்ளாந்தி பகுதியில் வாழைத் தோட்டத்தில் யானைகள் புகுந்து சேதம் ஏற்படுத்தின. இதுபற்றி செய்திகள் வெளியானதை அடுத்து, மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரவின் பேரில், அழகியபாண்டியபுரம் வனசரகத்தை சேர்ந்த ரேஞ்சர் மற்றும் அலுவலர்கள் யானைகள் சேதப்படுத்திய வாழைத் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். மேலும், நஷ்ட ஈடு வழங்குவதற்காக சேதம் அடைந்த பகுதிகளை அளவீடு செய்தனர். இதுபற்றி மாவட்ட வனஅலுவலர் இளையராஜாவிடம் கேட்டபோது, பூதப்பாண்டி தெள்ளாந்தியில், யானைகள் புகுந்த வாழைத் தோட்டம் பகுதிக்கு ஏற்கனவே கடந்த ஆண்டும் யானைகள் வந்திருந்தன. அப்போது நான் நேரில் சென்று ஆய்வு செய்த போது, குறிப்பிட்ட பகுதி வழியாக யானைகள் வருவதாக கூறினர். அதனை உறுதி செய்து அந்த பகுதியில் பெரிய பள்ளம் வெட்டி அகழி ஏற்படுத்தி யானைகள் வருவது தடுக்கப்பட்டது. தற்போது, அந்த அகழி சேதமடைந்துள்ளதாக தெரிகிறது. எனவே அதனை மீண்டும் சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குமரி முழுவதும், வனவிலங்குகள் இறங்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அவற்றை தடுப்பதற்காக தெள்ளாந்தி, திடல் உள்பட மாவட்டம் முழுவதும் 50 கி.மீ தொலைவிற்கு சூரிய மின்வேலி அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.  அரசு அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் இதற்கான பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.குடும்பத்தோடு வந்த யானைக் கூட்டம்தெள்ளாந்தி பகுதியில், கடந்த ஆண்டு ஒத்த யானை மட்டுமே வந்திருந்தது. ஆனால், இம்முறை இரு குட்டி யானைகள் உள்பட 6 யானைகள் வந்திருக்கலாம் என காலடித்தடங்கள் மூலம் தெரிகின்றன என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் யானைக்கூட்டம் மீண்டும் ஊருக்குள் வந்து விடுமோ என அச்சத்தில் இப்பகுதி மக்கள் உள்ளனர்.விளை பொருட்களை பதம் பார்க்கும் குரங்குகள்ஆரல்வாய்மொழி முதல் தடிக்காரன்கோணம் வரை குரங்குகள் அதிகம் காணப்படுகின்றன. சீதப்பால் பகுதியில் வனத்துறை பகுதியிலிருந்து சர்வசாதாரணமாக குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள் தென்னையில் உள்ள இளநீர் மற்றும் தேங்காய்களை லாவகமாக பறித்து தின்பதுடன், வாழைகள் உள்பட கனி வகைகள் மரங்களையும் விட்டு வைப்பதில்லை. இரவில் கூட தென்னை மேலிருந்து இளநீர் மற்றும் தேங்காளை தின்று விட்டு தோட்டை கீழே வீசி வருகின்றன.தோட்டக்கலைத்துறைக்கு கடிதம்மாவட்ட வனஆலுவலர் இளையராஜா கூறுகையில், யானைகள் சேதமான பகுதிகள் அளவீடு செய்யப்பட்டுள்ளன. இந்த அளவீடு குறித்து வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறையினருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அவர்கள் நஷ்டஈடு தொகை வழங்குவது குறித்து, பரிந்துரை செய்வதன் அடிப்படையில் நஷ்டஈடு வழங்கப்படும் என்றார். வனத்துறை அவசர உதவிக்குகுமரியில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் ஊருக்குள் மலைப்பாம்பு மற்றும் விஷப்பாம்புகளும் புகுந்து வருகின்றன. இது தவிர தற்போது வன விலங்குகளும் ஊருக்குள் வருவதால், அவசர வனத்துறை உதவிக்கு வனத்துறை கட்டுப்பாட்டறை எண் 04652 277494 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் அழைத்து தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்….

The post விவசாய நிலங்களை பாதுகாக்க குமரியில் 50 கிலோமீட்டர் சூரியமின்வேலி appeared first on Dinakaran.

Tags : Kumari ,Nagarko ,Kumary ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!