×

தோனிதான் எனக்கு பிடிக்கும்: சொல்கிறார் பிரியா பிரகாஷ் வாரியர்

சென்னை: கிரிக்கெட் ஃபேண்டஸி விளையாட்டுகளில் புதிய சூப்பர் சிக்ஸ் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் வெளியீட்டு விழாவில் குட் பேட் அக்லி ஹீரோயின் பிரியா பிரகாஷ் வாரியர், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத், ஆப் இயக்குனர் மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆப்பினை அறிமுகப்படுத்திய நடிகை பிரியா வாரியர் கூறியதாவது: எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும்.

தொடர்ச்சியாக ஐபிஎல் பார்ப்பேன், கேப்டன் கூல் தோனியை எனக்கு மிகவும் பிடிக்கும். சிஎஸ்கே தான் என் ஃபேவரைட் அணி. இந்த ஆப் வெகு எளிமையாக விளையாடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கிரிக்கெட் ரசிகர்கள் எளிதாக வெற்றி பெறலாம். இதன் மூலம் 30 லட்சம் வரை பரிசுத் தொகையை ஜெயிக்கலாம். சினிமா, கிரிக்கெட் இரண்டுமே நமது நாட்டின் இரு கண்கள் என்றார்.

Tags : Dhoni ,Priya Prakash Varrier ,Chennai ,Ugly ,Subramaniam Badrinath ,Mohan ,
× RELATED தமன்னா நடிக்கும்‘ஓ ரோமியோ’