×

அகமொழி விழிகள் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

சென்னை: சச்சு கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில், அட்டகாசமான திரில்லராக உருவாகியுள்ள ‘அகமொழி விழிகள்’. திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்திரி வெளியிட்டார். இசை கச்சேரிகளில் பாடல் பாடும் ஒரு இளைஞன், தன் காதலிக்கு ஒரு பிரச்சனை ஏற்பட, அதற்கெதிராக களமிறங்குகிறான். பார்வையில்லாத அவன் எதிரிகளை எப்படி பழி தீர்க்கிறான் என்பதே கதை. இப்படத்தில் ஆதம் ஹசன், நேஹா ரத்னாகரன் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர் இசை – எஸ்பி வெங்கடேஷ், ஜுபைர் முஹம்மது. ஒளிப்பதிவு – ஜஸ்பால் சண்முகம், ராஜேஷ், செல்வகுமார். எடிட்டிங் – சரவணன்.

Tags : Chennai ,Paulos George ,Sachu ,Creations ,Saseendra K. Shankar ,R.P. Chowdhury ,
× RELATED துரோகம் பண்றாங்க: செல்வராகவன் மீண்டும் பதிவு