×

லெவனில் இணைந்த ஸ்ருதி ஹாசன், ஆண்ட்ரியா

சென்னை: ஏ.ஆர். என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகியுள்ள விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’, மே 16ல் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘லெவன்’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி.என். அழகர்சாமியும், கேரளாவில் E4 என்டர்டெயின்மென்ட்டும், கர்நாடகாவில் ஃபைவ் ஸ்டார் செந்திலும், வெளிநாடுகளில் ஏபி இன்டர்நேஷனலும் வெளியிடுகிறார்கள்.

இப்படத்தில் டி. இமான் இசையில் நான்கு வித்தியாசமான பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சரிகம நிறுவனம் இசை ஆல்பத்தை ஏப்ரல் 29 அன்று வெளியிடுகிறது. தமிழ் படமொன்றில் முழுக்க ஆங்கிலத்தில் உருவாகியுள்ள பாடலை ஸ்ருதி ஹாசன் முதன்முறையாக பாடியுள்ளார். பிற பாடல்களை ஆண்ட்ரியா, மனோ, ஜோனிடா காந்தி உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.

Tags : Shruti Hassan ,Andrea ,Eleven ,Chennai ,Naveen Chandra ,Lokesh Achilles ,Sushma ,Tamil Nadu ,
× RELATED நடிகைக்கு சேலையை பரிசளித்தார்:...