×

1921ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறை.. சென்னையில் ஜனவரியில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை : தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு!!

சென்னை : சென்னையில் ஜனவரியில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் கூறுகையில், ‘ஜனவரி மாதமான தற்போது நாம் தமிழகத்தில் 22 மி.மீ. மழையை பெற்றுள்ளோம். அப்படியென்றால் ஜனவரி மாதத்தில் வழக்கமாக பெய்யும் 18 மிமீ மழை அளவை விட அதிகமாக வெறும் 4 நாட்களில் பெற்றுள்ளோம். இந்த மழை இன்றும் நாளையோடு மட்டும் நின்றுவிடாது. இன்னும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழை 6ம் தேதிக்கு மேலும் தொடர்ந்து 8 அல்லது 9 தேதிகளில் அதிகமாக இருக்கும். ஜனவரி மாதத்தில் 2017-ம் ஆண்டு 37.3 மி.மீ மழை பெய்துள்ளது. 2000ம் ஆண்டில் 30.3, 1990- இல் 86.5, 1986ல் 65.3 , 1985ல் 89.6, 1984ல் 34.5 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி 4 நாட்களில் 22 மி.மீ. மழை பெய்துள்ளது. 1921ம் ஆண்டு ஜனவரி மாதம் 141 மி.மீ. பெய்த மழையே பெரும் சாதனையாக இருந்தது. 4 நாட்கள் தானே ஆகிறது. இந்த மாதம் முடியும் வரை பொறுத்திருந்து பார்ப்போம். சென்னை தரமணியில் நள்ளிரவு முதல் தற்போது வரை 17 செ.மீ.மேல் மழை பெய்துள்ளது,’ என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்….

The post 1921ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறை.. சென்னையில் ஜனவரியில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை : தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pradeep John ,Tamil Nadu ,
× RELATED சென்னை மற்றும் சுற்றுவட்டார...