×

போதையின் மறுபக்கத்தை சொல்லும் தி பெட்லர்

சென்னை: சில்வர் ஸ்கிரீன் டிஜிட்டல் இந்தியா நிறுவனம் சார்பில் காஜா மைதீன் – ஷாகுல் அமீது தயாரிக்கும் படம் ‘தி பெட்லர்’. பிரபு சதீஷ், ஐஸ்வர்யா (அறிமுகம்) ஸ்ரீமன், சோனியா போஸ், கூல் சுரேஷ் இவர்களுடன் மேலும் பலரும் நடிக்கின்றனர். அமீன் ஒளிப்பதிவையும், மதுசூதனன் இசையையும், கார்த்திக் எடிட்டிங்கையும் கவனிக்கின்றனர். பிரபுசதீஷ் எழுதி, நாயகனாக நடித்து டைரக்ட் செய்கிறார். படத்தை பற்றி அவர் கூறும்போது, ‘‘இன்றைய இளைய சமுதாயம் மிக அதிகமாக போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை சீரழித்து வருகிறது. இவர்களுக்கு இந்த போதை வஸ்துகள் எங்கிருந்து வருகிறது. யார் மூலம் இளைய சமூகம் இவைகளை பெறுகிறது. இதனால் தனிப்பட்ட குடும்பம் மட்டுமல்ல சமுதாயமும் எப்படி பாழாகிறது. இவைகளில் இருந்து இளைய சமூகத்தை எப்படி மீட்டெடுப்பது? என்ற கேள்வியை மட்டும் வைத்துக் கொண்டு ‘தி பெட்லர்’ படத்தை ஆக்சன், கிரைம் திரில்லருடன் கமர்ஷியல் படமாக உருவாக்கி வருகிறேன்’’ என்றார்.

Tags : Chennai ,Kaja Maideen - Shakul Ameedhu ,Silver Screen Digital India ,Prabhu Sathish ,Aishwarya ,Sriman ,Sonia Bose ,Cool Suresh ,Ameed… ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்