×

ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் வளர்ச்சிக்கு ரூ.27 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: பிஎம் ஸ்ரீ பள்ளிகள் வளர்ச்சிக்கு ரூ.27 ஆயிரம் கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின் அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், அனுராக் தாக்குர்  ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில் ,‘‘ நாடு முழுவதும் 14,500க்கும் அதிகமான பள்ளிகளில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளாக மேம்படுத்தும். இந்தப் பள்ளிகளுக்கு மொத்தச் செலவு ரூ.27,360 கோடியாக இருக்கும்.இதில் 2022-23 முதல் 2026-27 வரையிலான ஐந்து ஆண்டு காலத்திற்கு மத்திய அரசின் பங்கு ரூ.18,128 கோடியாக இருக்கும்’’ என்றனர். அதே போல் கேரள மாநிலம், கொச்சியில் உள்ள காக்கநாடு வழியாக ஜேஎல்என் மைதானம் முதல் தகவல் பூங்கா வரையிலான கொச்சி மெட்ரோ ரயில்  திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்  அளித்துள்ளது. * ரயில்வே நிலம் குத்தகைபிரதமரின் கதிசக்தி திட்டத்திற்காக ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை நீண்டகால குத்தகைக்கு அளிப்பதற்கு  ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கதிசக்தி திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 300 சரக்கு போக்குவரத்து முனையங்கள் அமைக்கப்படும்.நிலத்தின் சந்தை மதிப்பில், ஆண்டுக்கு 1.5 சதவீத வட்டியில், 35 ஆண்டுகள் வரை ரயில்வே நிலங்கள் நீண்ட கால குத்தகைக்கு அளிக்கப்படும்….

The post ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் வளர்ச்சிக்கு ரூ.27 ஆயிரம் கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Union Cabinet ,PM Sri Schools ,New Delhi ,BM Sri Schools ,Modi ,PM Siri Schools ,Dinakaran ,
× RELATED குவைத் மாங்காஃப் பகுதியில் ஏற்பட்ட தீ...