×

பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல்நலம் தொடர்ந்து கவலைக்கிடம்: அரண்மனையில் குவியும் ராஜகுடும்பத்து உறவினர்கள்

பிரிட்டன்: பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது. 96 வயதான ராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்தது. எனினும் தொடர்ந்து அவர் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார். தொடர்ந்து நடக்க முடியாத சூழலில், அவர் கைத்தடி ஏந்தி நிகழ்வுகளில் கலந்துகொண்டார். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக ராணியில் உடல் நிலை ஆரோக்கியமாக இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணி எலிசபெத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில், ”இன்று காலை ராணியின் உடல்நிலையை சோதித்ததைத் தொடர்ந்து, ராணியின் மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்து அச்சம் அடைந்துள்ளனர். மேலும், அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பரிந்துரைத்துள்ளனர். பல்மோரளில் இருக்கும் கென்சிங்டன் அரண்மனையில் ராணி தற்போது தங்கியுள்ளார்” ராணியின் உடல் நிலை மோசமாகி வருவதால், அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணியின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து, அவரது நான்கு பிள்ளைகளும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. …

The post பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல்நலம் தொடர்ந்து கவலைக்கிடம்: அரண்மனையில் குவியும் ராஜகுடும்பத்து உறவினர்கள் appeared first on Dinakaran.

Tags : Britain ,Queen Elizabeth ,Buckingham Palace ,
× RELATED இங்கிலாந்து மேயராக சென்னை தமிழ் பெண்