×

ஜெயலட்சுமி இயக்கத்தில் மீனவ இளைஞனின் காதல் கதை

சென்னை: ஸ்கை வாண்டர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜெயலட்சுமி தயாரித்து எழுதி இயக்கியுள்ள படம், ‘என் காதலே’. இதில் ‘கபாலி’, ‘பரியேறும் பெருமாள்’, ‘காலேஜ் ரோட்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் லிங்கேஷ் ஹீரோவாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் லண்டன் லியா, திவ்யா தாமஸ், காட்பாடி ராஜன், மதுசூதன ராவ், மாறன், கஞ்சா கருப்பு, ‘சித்தா’ தர்ஷன், செந்தமிழ் நடித்துள்ளனர். ‘மூடர் கூடம்’ டோனி ஜான் ஒளிப்பதிவு செய்ய, சாண்டி சாண்டெல்லோ இசை அமைத்துள்ளார். ‘தனி ஒருவன்’ கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்துள்ளார். கபிலன், சந்துரு, ஜெயலட்சுமி பாடல்கள் எழுதியுள்ளனர்.

படம் குறித்து ஜெயலட்சுமி கூறுகையில், ‘தமிழ் கலாசாரம் குறித்து ஆய்வு செய்ய லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும் லியா, மீனவ இளைஞன் லிங்கேஷை காதலிக்கிறார். ஆனால், தனக்கு பல்வேறு பிரச்னைகள் இருப்பதால், லியாவின் காதலை ஏற்க மறுக்கிறார் லிங்கேஷ். இறுதியில் என்ன நடக்கிறது என்பது கதை. கேரளா, காரைக்கால், நாகப்பட்டினம், பாண்டிச்சேரியில் கடல் சார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. வரும் மே மாதம் படம் வெளியாகிறது’ என்றார்.

Tags : Jayalakshmi ,Chennai ,Sky Wanders Entertainment ,Lingesh ,London Leah ,Divya Thomas ,
× RELATED இரண்டாவது படத்திலேயே இயக்குனரான நடிகை