×

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சென்னை ராயப்பேட்டையில் சிபிசிஐடி அதிகாரிகளின் நேரடி விசாரணை தொடக்கம்.!

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சென்னை ராயப்பேட்டையில் சிபிசிஐடி அதிகாரிகள் நேரடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் அதிமுக தலைமை அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினர். அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தது. அப்போது  ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓ.பி.எஸ். ஆவணங்களை எடுத்து சென்றுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலக மோதல், கலவரம், ஆவணங்கள், சொத்துகள் சூறை தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான நான்கு வழக்குகளையும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் சி.வி.சண்முகம் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அதிமுக அலுவலக கலவரம், சூறையாடப்பட்டது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய பிறகும்  இதுவரை விசாரணையை தொடங்கவில்லை எனவும், குற்றச் செயல் நடந்த இடத்திற்கு வந்து பார்வையிடாதது அதிர்ச்சியளிப்பதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சென்னை ராயப்பேட்டையில் சிபிசிஐடி அதிகாரிகள் நேரடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் அதிமுக தலைமை அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினர்….

The post அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சென்னை ராயப்பேட்டையில் சிபிசிஐடி அதிகாரிகளின் நேரடி விசாரணை தொடக்கம்.! appeared first on Dinakaran.

Tags : CBCIT ,Chennai Rayapet ,Chennai ,CPCIT ,Chennai Rayappate ,CPCID ,Dinakaran ,
× RELATED மெத்தாம்பெட்டமின் விற்றவர் சிக்கினார்