×

பணிபுரியும் வல்லுநர்களுக்காக நிர்வாக எம்பிஏ படிப்பு: ஐஐடியில் அறிமுகம்

சென்னை: பணிபுரியும் வல்லுநர்களுக்கான பணியிடைக் காலப் படிப்பாக ‘நிர்வாக எம்பிஏ’ என்ற 2 வருட பாட திட்டத்தை, சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னை ஐஐடி சார்பில் பணிபுரியும் வல்லுநர்களுக்கான பணி இடைக்கால படிப்பாக நிர்வாக எம்பிஏ (எக்சிகியூடிவ் எம்பிஏ) பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 ஆண்டு பாடத்திட்டம் கடுமையானது மட்டுமின்றி நடைமுறை சார்ந்தது. இந்த பாடத்திட்டத்தில் சேர பட்டப்படிப்பு முடித்தும், 3 ஆண்டுகள் தொழில் அனுபவம் இருக்க வேண்டும். அதன்பிறகு நுழைவு தேர்வு, நேர்காணல் நடைபெறும். இந்த வகுப்புகள் நேரடியாகவும் காணொலி மூலமாகவும் வார இறுதிநாட்களில் ஒருவாரம் விட்டு மறுவாரம் நடைபெறும். அக்டோபர் 10ம் தேதி வரை https://doms.iitm.ac.in/emba என்ற இணைய முகவரியின் மூலமாக விண்ணபிக்கலாம். …

The post பணிபுரியும் வல்லுநர்களுக்காக நிர்வாக எம்பிஏ படிப்பு: ஐஐடியில் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : IITs ,Chennai ,IIT Chennai ,IIT ,Dinakaran ,
× RELATED டேட்டா சயின்ஸ் படித்த 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு: சென்னை ஐ.ஐ.டி தகவல்