×

ஊதிய ஒப்பந்தத்தால் ஏற்பட்டுள்ள செலவை சமாளிக்க சென்னையில் அனைத்து பஸ்களையும் இயக்க வேண்டும்: எம்டிசி நிர்வாகம் உத்தரவு

சென்னை: எம்டிசி நிர்வாகம் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘போக்குவரத்து ஊழியர்களுக்கு 14வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் மாதம் முதல் ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.10 கோடியாக அதிகரித்துள்ளது. இவ்வாறு கூடுதலாக செலவு ஏற்படுவதை விளம்பரம் மூலமாக ரூ.3.40 கோடியும், மீதி ரூ.6.60 கோடியை டிக்கெட் வருவாயின் மூலம் மட்டுமே ஈட்ட வேண்டும். எனவே, முழுமையாக கால அட்டவணைப்படி அனைத்து பேருந்துகளையும் மண்டல மேலாளர்கள் மற்றும் கிளை மேலாளர்கள் இயக்க வேண்டும். ஒவ்வொரு டிப்போவுக்குமான வசூல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்த இலக்கை அடைய ஊழியர்களை ஊக்குவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது….

The post ஊதிய ஒப்பந்தத்தால் ஏற்பட்டுள்ள செலவை சமாளிக்க சென்னையில் அனைத்து பஸ்களையும் இயக்க வேண்டும்: எம்டிசி நிர்வாகம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,MDC ,MDC Administration ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்