×

6.8 ரிக்டர் அளவில் சீனாவில் நிலநடுக்கம் 50 பேர் பரிதாப பலி: மக்கள் பதற்றம்

பீஜிங்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 50 பேர் பலியாகினர். இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. சீனாவில் திபெத்தை ஒட்டிய சிச்சுவான் மாகாணத்தில் உள்ள லடிங் நகரில் 6.8 என்கிற ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. சிச்சுவானின் தலைநகர் செங்டுவில் இருந்து 226 கிமீ தொலைவில் லடிங் நகரில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள், வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 50 பேர் பலியாகினர். இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த மகாணத்தில், கடந்த 2008ம் ஆண்டு 8.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 69,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாகாணத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகளும் அதிகரிப்பதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டிற்கு ஒருவர் மட்டுமே வெளியில் வர வேண்டுமென்ற கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது….

The post 6.8 ரிக்டர் அளவில் சீனாவில் நிலநடுக்கம் 50 பேர் பரிதாப பலி: மக்கள் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : earthquake ,Beijing ,China ,Sichuan province ,
× RELATED உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு...