சென்னை: தமிழில் பிரபலமாக இருந்தவர் நடிகர் ஸ்ரீ. ‘வழக்கு எண் 18/9’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’, போன்ற பல திரைப்படங்களிலும் ஹீரோவாக நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் ‘இறுகப்பற்று’ திரைப்படம் வெளிவந்தது. ஆனால் இப்போது அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார். தற்போது உடல் மெலிந்து, தாடி வைத்து, கன்னங்கள் ஒட்டிய நிலையில் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டவராக தெரிகிறார். அவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் சமூக வலைத்தளத்தில் விரக்தியான கருத்துகளை அவர் தெரிவித்து வருகிறாராம்.
ஒருவேளை இது நடிகர் ஸ்ரீயின் உண்மையான சோஷியல் மீடியா அக்கவுண்டாக இருந்தால் அவருக்கு சரியான மனரீதியான உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. காரணம் அந்த சோஷியல் மீடியா பக்கத்தில் சில வருடங்களாக போடப்பட்ட பதிவுகளில் அதிகமாக விரக்தியின் உச்சத்தில் போடப்பட்ட பதிவுகள் போலவே இருக்கிறது. 37 வயதில் தான் தனியாக இந்த வீட்டில் வசித்து வருவதாக ஸ்ரீ கூறியிருக்கிறார். இது தொடர்பாக நடிகர் ஸ்ரீ விளக்கம் கொடுக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

