×

நவகிரக தோஷம் போக்கும் சிறப்பு தலங்கள்

* சூரியன் வணங்கி வழிபட்ட, சென்னை செங்குன்றத்திற்கு அருகில் உள்ள ஞாயிறு கோயிலில் அருளும் புஷ்பரதேஸ்வரரை தரிசித்தால் சூரியனால் உண்டான தோஷங்கள் விலகுகிறது.

* கும்பகோணம் அருகேயுள்ள திருவையாற்றிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள திங்களூர் தல சந்திரபகவானை வணங்கினால் சந்திரகிரக தோஷங்கள் நீங்குகிறது.

* மதுரையிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள குருவித்துறையில் குரு பகவானையும் சித்திரரதவல்ல பெருமாளையும் வழிபட்டால் குரு கிரக தோஷங்கள் நீங்கி குதூகல வாழ்வு கிட்டும்.

* கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பட்டீஸ்வரத்தில் அருளும் த்ரிபங்க நிலையில் உள்ள துர்க்காம்பிகையை உளமாற வழிபட்டால் ராகு கிரக தோஷங்கள் நீங்கிவிடும்.

* 64 திருவிளையாடல்களை நிகழ்த்திக் காட்டிய மதுரை சொக்கநாதப் பெருமாளை தரிசித்தால் புத கிரக தோஷங்கள் விலகியோடி பொன்னான வாழ்வு கிட்டும்.

* சென்னை மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் தனிச் சந்நதி கொண்டிருக்கும் சரபேஸ்வரரை ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் வழிபட்டால் பில்லி சூன்ய தோஷங்கள் விலகியோடுகின்றன. ஸ்ரீ  ஸ்ரீரங்கத்தில் அருளாட்சி புரியும் ரங்கநாதப் பெருமானை வணங்கினால் சுக்கிர கிரக தோஷங்கள் தொலைந்து மகிழ்ச்சியான வாழ்வு கிட்டும்.

* காஞ்சிபுரத்தில் அருளும் சித்ரகுப்தரை மனமுருக வேண்டினால் கேது கிரக தோஷங்கள் மறையும்.

* மயிலாடுதுறை அருகேயுள்ள திருநெல்லிக்காவல் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 2 கி.மீ தொலைவில் உள்ள திருக்கொள்ளிக்காட்டில் அருளாட்சி புரியும் சனிபகவானை வணங்க சனி கிரக தோஷங்கள் சட்டென மறைந்தோடும்.

* சென்னை அரக்கோணத்திற்கு அருகே தெற்கு நோக்கி தனிக்கோயில் கொண்டுள்ள வாராஹியை வணங்க, செவ்வாய் கிரக தோஷங்கள் தொலைந்தோடும்.

* கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள ஐயாவாடி பிரத்யங்கிரா தேவிக்கு அமாவாசை தினத்தன்று செய்யப்படும் மிளகாய் வத்தல் யாகத்தில் கலந்துகொண்டால் மாந்தி, குளிகன் போன்றவர்களால் ஏற்பட்ட தோஷங்கள் அகலும்.

Tags : Navagraha Dosham ,
× RELATED திருமுறைகளில் கஜசம்ஹாரம்