×

ஜப்பானில் ரிலீசாகும் சிம்புவின் மாநாடு

சென்னை: தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வெளியான படம், ‘மாநாடு’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்த இப்படம், வரும் மே மாதம் ஜப்பானில் திரைக்கு வருகிறது.  இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறுகையில், ‘நல்ல படம் என்பது அழகிய பறவை போல.

கண்டம் கடந்தும் கூட நேசிக்கப்படும். ‘மாநாடு’ படம் ஜப்பானில் மே மாதம் திரைக்கு வருகிறது. இந்த லூப்ஹோல் திரைக்கதை ஜப்பானியர்களின் மனதை கொள்ளை கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார். சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த இப்படத்தின் 2ம் பாகத்தை உருவாக்குவது பற்றி வெங்கட் பிரபு, சுரேஷ் காமாட்சி, சிம்பு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags : Japan ,Chennai ,Venkat Prabhu ,Simbu ,S.J. Suriya ,Kalyani Priyadarshan ,Suresh Kamatchi… ,
× RELATED துப்பாக்கி, பில்லா 2 பட வில்லன் வித்யூத் ஜம்வால் நிர்வாண ‘போஸ்’