×

கழிவறையை கழுவும் பள்ளி மாணவர்கள்: வைரல் வீடியோவில் பரிதாபம்

பல்லியா:  உத்தரப் பிரதேசத்தில் கழிவறையை ஆரம்ப பள்ளி மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ வைரலாகி இருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் நேற்று முன்தினம் வீடியோ ஒன்று வைரலானது. இதில், அரசு ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும்படி மிரட்டப்படுகின்றனர். அங்கு நிற்கும் ஒருவர், அந்த மாணவர்களை திட்டுவதோடு, தான் கூறுவதை செய்யவில்லை என்றால் கழிவறையில் வைத்து பூட்டி விடுவேன் என்றும் மிரட்டுகிறார். இதனால் பயந்து நடுங்கும் அந்த சிறுவர்கள், கழிவறையை சுத்தம் செய்கின்றனர். இந்த வீடியோ வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சோஹனின் அருகே உள்ள பிப்ரகலா என்ற இடத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் இது எடுக்கப்பட்டதாக தெரிகின்றது. இந்த வீடியோவை பார்த்த கல்வி துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது….

The post கழிவறையை கழுவும் பள்ளி மாணவர்கள்: வைரல் வீடியோவில் பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,
× RELATED உத்தரப்பிரதேசம் அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி தோல்வி