×

திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் முக்கிய 10 கோரிக்கை அடங்கிய மனு; கலெக்டரிடம் எம்எல்ஏ வழங்கினார்

திருவெற்றியூர்: திருவொற்றியூர் தொகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகளான 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை சென்னை கலெக்டரிடம், கே.பி.சங்கர் எம்எல்ஏ வழங்கினார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும், தங்கள் தொகுதியில் உள்ள 10 முக்கிய கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டரிடம், கோரிக்கை மனு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதியிடம், திருவொற்றியூர் தொகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகளான 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அவர் கொடுத்த மனுவில் திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சொந்தமாக இடம் ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடம் கட்டிடம், திருவொற்றியூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கவும், அதிநவீன வசதிகளுடன் திருவொற்றியூர் பேருந்து நிலையம் புதுப்பித்து தர, கொசஸ்தலை ஆற்றை தூர்வாரி, எண்ணூர் நெட்டுக்குப்பம் முகத்துவாரத்தை ஆழப்படுத்தி தூண்டில் வளைவு அமைத்துத்தர, நீண்ட காலமாக வாழும் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க, திருவொற்றியூர் மணலி இணைப்பு கால்வாய் மேம்பாலம் மற்றும் ஜோதிநகர் சடையங்குப்பம் மேம்பாலம் பணிகளை விரைவுப்படுத்தவும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு இருந்தார்….

The post திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் முக்கிய 10 கோரிக்கை அடங்கிய மனு; கலெக்டரிடம் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Thiruvotiyur Assembly Constituency ,MLA ,Thiruvettiyur ,KP Shankar ,Tiruvettiyur ,Collector ,Chennai ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு :...