×

லஞ்ச் பாக்ஸ் ரெசிபி

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்குச் சுவையான, வித்தியாசமான உணவு வகைகளைத் தயாரித்துக் கொடுக்கும்போதுதான் அவர்கள் மீதம் வைக்காமல் சாப்பிடுவார்கள். அதனால் அன்றாடம் தயாரிக்கும் லஞ்ச் பாக்ஸில் வெரைட்டியாக  ரெசிபிகள் செய்து வைக்கலாம்.முருங்கைப் பொடி இட்லிதேவை: இட்லி  5 (சதுரங்களாக நறுக்கவும்) எண்ணெய்  தேவையான அளவு    பொடி செய்ய ஆய்ந்த முருங்கைக்கீரை – ஒரு கப் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறுப்பு எள்  தலா ஒரு கப்காய்ந்த மிளகாய்  15 உப்பு, பெருங்காயத்தூள்  தேவையான அளவுசெய்முறை: வெறும் வாணலியில் பொடி செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒவ்வொன்றாக  வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைக்கவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு இட்லி துண்டுகள், தேவையான அளவு பொடி சேர்த்து நன்கு புரட்டி இறக்கவும்.எள்ளோதரைதேவை: வடித்த சாதம்  ஒரு கப்கறுப்பு எள்  4 டீஸ்பூன்உளுத்தம்பருப்பு  4 டீஸ்பூன்காய்ந்த மிளகாய்  4பெருங்காயத்தூள்  ஒரு சிட்டிகை கறிவேப்பிலை சிறிதளவு எண்ணெய், உப்பு  தேவையான அளவு         செய்முறை: வெறும் வாணலியில் எள், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். ஆறிய பின் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி வடித்த சாதம், அரைத்த பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.கேப்சிகம் ரைஸ்தேவை: வடித்த சாதம்  ஒரு கப் குடை மிளகாய், வெங்காயம் தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)இஞ்சி  பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்உப்பு, எண்ணெய் தேவையான அளவு   செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் குடைமிளகாய், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, வடித்த சாதம் சேர்த்துக்கலந்தால் கேப்சிகம் ரைஸ் தயார்.சாக்லேட் தோசைதேவை: தோசை மாவு  ஒரு கப்கோகோ பவுடர்  தேவையான அளவு முந்திரித் துருவல் கால் கப்நெய் – தேவையான அளவு   செய்முறை: கோகோ பவுடருடன் முந்திரித் துருவல் சேர்த்துக் கலந்துவைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தோசைகளாக ஊற்றி, மேலே கோகோ – முந்திரி கலவையைத் தூவி, சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். குட்டீஸைக் குஷியில் ஆழ்த்தும் தோசை இது.தக்காளி – பூண்டு சாதம்தேவை: வடித்த சாதம்  ஒரு கப் தக்காளி  4 (பொடியாக நறுக்கவும்) வெங்காயம்  ஒன்று (பொடியாக நறுக்கவும்) பூண்டுப் பல்  10 (ஒன்றிரண்டாகத் தட்டவும்) பச்சை மிளகாய்  2 (நீளவாக்கில் நறுக்கவும்) எண்ணெய், உப்பு  தேவையான அளவு    செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, பூண்டு சேர்த்து வறுக்கவும். இதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, வடித்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.இட்லி ஃப்ரைதேவை:இட்லி  5 (சிறிய சதுரங்களாக நறுக்கவும்) வெங்காயம், தக்காளி  தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) மிளகாய்த்தூள், தக்காளி சாஸ்  தலா ஒரு டீஸ்பூன்கடுகு, கறிவேப்பிலை  தாளிக்கத் தேவையான அளவுமஞ்சள்தூள் ஒரு சிட்டிகை எண்ணெய், உப்பு தேவையான அளவுசெய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், இட்லி துண்டுகள் சேர்த்து வதக்கி இறக்கவும்.மசாலா லெமன் ரைஸ்தேவை: வடித்த சாதம்  ஒரு கப் மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் கடுகு அரை டீஸ்பூன் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு  தலா ஒரு டீஸ்பூன்வறுத்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன் முந்திரிப்பருப்பு 4எலுமிச்சைப்பழம்  ஒன்று கறிவேப்பிலை – சிறிதளவுஎண்ணெய், உப்பு  தேவையான அளவு   செய்முறை: எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும். இறுதியாக எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கவும்.ஆனியன் அவல்தேவை: கெட்டி அவல்  ஒரு கப் தேங்காய்த்துருவல் – கால் கப்வெங்காயம் ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய்  ஒன்று (பொடியாக நறுக்கவும்) கடுகு கால் டீஸ்பூன்கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு  தலா ஒரு டீஸ்பூன்முந்திரிப்பருப்பு – 10 வறுத்த வேர்க்கடலை  ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சிறிதளவு மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை எண்ணெய், உப்பு தேவையான அளவு   செய்முறை: அவலை ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு களைந்து நீரை வடியவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை தாளிக்கவும். இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, ஊறவைத்த அவல், மஞ்சள்தூள், உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி, நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்தேவை: வடித்த சாதம்  ஒரு கப்பால் அரை கப் (காய்ச்சி ஆறவைத்தது) தயிர் 2 டீஸ்பூன் திராட்சை (பச்சை, கறுப்பு) தலா 10 மாதுளை முத்துகள் 2 டீஸ்பூன் கடுகு, கடலைப்பருப்பு  தலா அரை டீஸ்பூன் இஞ்சித் துருவல், கொத்தமல்லித்தழை – சிறிதளவு எண்ணெய்  ஒரு டீஸ்பூன் உப்பு  தேவையான அளவு     செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப் பருப்பு, இஞ்சி தாளிக்கவும். அகலமான பாத்திரத்தில் சாதத்துடன் உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும். இதனுடன் பால், தயிர், தாளித்த கடுகு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை திராட்சை, கறுப்பு திராட்சை, மாதுளை முத்துகள், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும். இப்படி செய்து லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பினால், மதியம் சாப்பிடும்போது கொஞ்சம்கூட புளிக்காது.பிரெட் வெஜ் ரோல்தேவை: பிரெட் ஸ்லைஸ்கள் 10 கேரட் துருவல் கால் கப் புதினா சட்னி, தக்காளி சட்னி தலா கால் கப்வெண்ணெய் தேவையான அளவு         செய்முறை: பிரெட் ஸ்லைஸ்களை அப்பளக் குழவியால் தேய்க்கவும். இதன்மீது வெண்ணெய் தடவவும். பிறகு, ஒரு பிரெட் ஸ்லைஸின் ஓரத்தில் மற்றொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து ஒட்டியதுபோல தேய்க்கவும். இதன்மீது புதினா சட்னி, தக்காளி சட்னியைத் தடவவும். பிறகு, மேலே கேரட் துருவலைத் தூவி, பாய் போல சுருட்டினால் பிரெட் வெஜ் ரோல் ரெடி.வற்றல் குழம்பு சாதம்தேவை: வடித்த சாதம்  ஒரு கப் புளி  எலுமிச்சை அளவுசுண்டைக்காய் வற்றல் 5தோல் உரித்த சின்ன வெங்காயம் – 10பூண்டுப் பல்  10கறிவேப்பிலை  சிறிதளவுகடுகு, வெந்தயம்  தலா கால் டீஸ்பூன் மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன்வற்றல் குழம்பு பொடி 2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு தேவையான அளவு     செய்முறை: புளியைக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் சுண்டைக்காய் வற்றல், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், மஞ்சள்தூள், உப்பு, 2 டீஸ்பூன் வற்றல் குழம்பு பொடி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும். இதனுடன் வடித்த சாதம் சேர்த்துக் கிளறினால் வற்றல் குழம்பு சாதம் தயார். வற்றல் குழம்பு பொடி தயாரிக்கும் முறை:  துவரம்பருப்பு 2 டீஸ்பூன், கடலைப் பருப்பு, தனியா (மல்லி) தலா ஒரு டீஸ்பூன், மிளகு, கடுகு, வெந்தயம்  தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  4 ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து, ஆறியபின் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.சட்னி தோசைதேவை: தோசை மாவு ஒரு கப் எண்ணெய்  தேவையான அளவுசட்னி செய்ய: பொட்டுக் கடலை, தேங்காய்த்துருவல்  தலா ஒரு கப், பச்சை மிளகாய்  2, பூண்டுப் பல்  ஒன்று, புளி ஒரு கொட்டை பாக்கு அளவு, உப்பு – சிறிதளவு.    தொகுப்பு: – ஜெய காரிகை

The post லஞ்ச் பாக்ஸ் ரெசிபி appeared first on Dinakaran.

Tags :
× RELATED பாஜ அழைத்தால் பிரசாரம் செய்வேன்: நடிகை ஜெயப்பிரதா பேட்டி