×

பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்களுக்கு கிடா விருந்து-முன்னாள் மாணவர்கள் அசத்தல்

முசிறி : முசிறி அருகே உள்ள நாச்சம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இதன் தலைமையாசிரியராக தற்போது சசிகலா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் 2012-2013ம் ஆண்டில் படித்த மாணவர்கள் ராஜா, சுப்பிரமணி உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் 30 பேர் தங்களுக்கு பாடம் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு நன்றி கூறி கௌரவிக்க விரும்பியுள்ளனர். இதற்காக 2012-2013 கல்வியாண்டில் பணியாற்றிய குமாரலிங்கம், காந்திமதி, அமரவதி, உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களை நாச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வரவழைத்தனர்.நாச்சம்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலில் முன்னாள் மாணவர்கள் சார்பில் இரண்டு கெடா வெட்டபட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பிரியாணி, மட்டன் குழம்பு, மட்டன் வருவல், சிக்கன் வறுவல், முட்டை. சைவ பிரிய ஆசிரியர்களுக்கு காளான் பிரியாணி ஆகியவை ஒருபக்கம் தயாரானது. பள்ளி வளாகத்தின் மற்றொரு பக்கத்தில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், தற்போது பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் ,பள்ளி மாணவர்கள் கிராம முக்கியஸ்தர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாணவர்கள் தாங்கள் பள்ளியில் படித்தபோது நடைபெற்ற நினைவுகளையும், ஆசிரியர்கள் தங்களுக்கு சிறப்பான நல் ஒழுக்கங்களை கற்பித்ததையும் நினைவு கூர்ந்தனர். அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு தலைவாழை இலையில் மட்டன் பிரியாணி விருந்து நடைபெற்றது.முன்னதாக ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்தும் மரக்கன்றுகளை வழங்கியும், பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் கொடுத்தும் முன்னாள் மாணவர்கள் மகிழ்ந்தனர்.முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு பாடம் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு கறி விருந்து வைத்து அசத்திய சம்பவம் அப்பகுதி கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது….

The post பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்களுக்கு கிடா விருந்து-முன்னாள் மாணவர்கள் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Kida feast ,MUSHRI ,Nachambatti Union ,school ,Nachambatti ,Musiri ,Sasigala ,Kita Feast ,
× RELATED ஹெல்மெட் அணிந்த மர்ம ஆசாமி கைவரிசை...