×

திருவள்ளூர் சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் ஜெயா நகர் விரிவாக்கம், குமரவேல் நகரில் அமைந்துள்ள  சர்வ சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடந்தது. இதை முன்னிட்டு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கிராம தேவதை வழிபாடு, பூர்ணா ஹூதி, தீபாராதனை நடந்தது. பின்னர் சாய்பாபா விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் அனுக்ஞை விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, ப்ரவேசபலி, மிருத்சங்கரஹனம், அங்குரார்பணம், கும்ப அலங்காரம், முதல் கால யாகபூஜை, சுவாமிக்கு தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று காலை விஷேச சந்தி, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, ஸ்பர்ஸாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்தது. பின்னர், விமான கலசத்தில் புனித நீரை ஊற்ற கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. அதன் பிறகு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.விழாவில் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், செயற்பொறியாளர் வ.ராஜவேல், நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், துணைத்தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் மற்றும் திருவள்ளூர், பெரியகுப்பம், மணவாளநகர், காக்களூர், ஈக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம், பொதுமக்கள் செய்திருந்தனர். …

The post திருவள்ளூர் சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Saibapha ,Shrine Kumbaphishekam ,Tiruvallur Jaya Nagar Expansion ,Sarva Saibhabha Shrine ,Kumaravel Nagar Kumaphishekam ,Thiruvallur Saibapha Shrine Kumbafa ,
× RELATED புத்தக திருவிழா நிகழ்ச்சிகளில்...