×

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை எதிரொலி; முக்கிய ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி மற்றும் சோழவரம் மற்றும் கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி மற்றும் சோழவரம் மற்றும் கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளாகும். தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சில தினங்களாக விட்டு விட்டு மழை கொட்டித் தீர்த்தது. அதன்படி நேற்று முன்தினம் அதிகபட்சமாக ஆவடியில் 70 மில்லி மீட்டர் மழை, செங்குன்றத்தில் 47 மில்லி மீட்டர் மழை, தாமரைப்பாக்கத்தில் 39.60 மில்லி மீட்டர் மழை, திருவாலங்காட்டில் 30 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. மேலும் திருவள்ளூரில் 24 மில்லி மீட்டர் மழை, பூந்தமல்லியில் 17 மில்லி மீட்டர் மழை, திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டையில் 16 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியிருக்கிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  …

The post திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை எதிரொலி; முக்கிய ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur district ,Thiruvallur ,Bundi Satyamurthi Reservoir ,Chennai ,
× RELATED திருவள்ளூர் மாவட்ட எல்லை, குடோனில்...