×

எந்த எதிரியையும் சந்திக்க தயார்: பாக். துணை கேப்டன் ரிஸ்வான் பேட்டி

சார்ஜா: ஆசிய கோப்பை டி.20 கிரிக்கெட்டில் லீக் சுற்றில் நேற்று நடந்த கடைசி போட்டியில் ஏ பிரிவில் பாகிஸ்தான்- ஹாங்காங் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 20 ஓவரில்2 விக்கெட்இழப்பிற்கு 193 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய ஹாங்காங் அணியில் அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற 10.4ஓவரில் 38 ரன்னுக்கு சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 155ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது.ஆட்டநாயகன் விருது பெற்ற முகமது ரிஸ்வான் கூறியதாவது: ”டி20 கிரிக்கெட்டாக இருந்தாலும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவது மிகவும் முக்கியமானது.மூத்த வீரராக இருந்து பொறுப்பேற்க வேண்டும், இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் போது எப்போதும் ஒரு அழுத்தம் அனைத்து வீரர்களுக்கும் இருக்கும். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்த மோதலுக்காக காத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இது இறுதி போட்டி போல இருக்கும். இந்த போட்டியில் முடிந்தவரை சாதாரணமாக விளையாட வேண்டும் என்றே நினைக்கிறேன். பாகிஸ்தானின் நம்பிக்கை தற்போது அதிகமாக உள்ளது, எந்த எதிரியையும் சந்திக்க தயாராக உள்ளது. என்றார்….

The post எந்த எதிரியையும் சந்திக்க தயார்: பாக். துணை கேப்டன் ரிஸ்வான் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Bach ,Vice Captain ,Rizwan ,CHARJA ,Pakistan ,Hong Kong ,Asian Cup T20 Cricket ,Dinakaran ,
× RELATED கார் ஓட்டுநர் பலியான விவகாரத்தில்...