ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஓர் ஆய்வில், நீர்க் காய்கறிகளை நீராவியில் அவித்தோ, வேக வைத்தோ சாப்பிடும்போது, எப்போதும் இளமையாகவும் உடலுக்கு தேவையான முழு ஊட்டச்சத்துகள் அதிகரிக்கும் என்றும், செரிமானம் மேம்படுத்தப்படும் என்றும் அந்த ஆய்வு நிரூபிக்கிறது. அளவுக்கதிகமாக காய்கறிகளை வறுத்தோ பொரித்தோ சாப்பிடும் போது வைட்டமின்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துவிடும். குறிப்பாக, வைட்டமின் பி மற்றும் சி நீரில் எளிதாகக் கரையும் தன்மை கொண்டது. நீர்க்காய்கறிகளிலிருந்து கிடைக்கும் எந்தவோர் ஊட்டச்சத்தையும் முழுமையாகப் பெற, சமைக்கும்போதே சில டெக்னிக்குகளைப் பின்பற்றவேண்டும் என்கின்றார் டயட்டீசியன் வண்டார் குழலி. எந்தக் காய்கறியாயினும் அதிக எண்ணெயை உபயோகப்படுத்தி சமைத்தால் வைட்டமின் சி மற்றும் இ வைட்டமீன் ஏ நார் சத்து அதிகம் உள்ளதுஆகிய சத்துகள் நீங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, முடிந்தவரை காய்கறிகளைப் பொரித்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த காய்கறிகள் வேக வைத்த தண்ணீரை வீனாக்காமல் சூப் செய்து சாப்பிடவும். நறுக்கி வைத்து பயன்படுத்தாதீர்! காற்றில் உலரும் காய்கறிகளில் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் எளிதாகப் படர்ந்துவிடும். குறிப்பாக நீர்க்காயகளை சமைக்கும் சில நொடிகளுக்கு முன்பு நறுக்க வேண்டும்., நிமிடங்கள் கடக்க கொஞ்சம் கொஞ்சமாக காய்கறியில் உள்ள ஊட்டச்சத்துகளை அழித்துவிடும். ஆகவே, எத்தகைய சூழலிலும் நறுக்கிய நீர்க்காய்களை காற்றில் உலரவிடக்கூடாது. நீர்மக் காய்கறிகளை நீண்ட நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் சத்துகளை இழக்கநேரிடும். எனவே, நீண்டநாட்கள் காய்கறிகளை ஃப்ரிட்ஜில் சேமித்து வைப்பதைத் தவிர்க்கவேண்டும். முடிந்தவரை பூசணி, ஜவ்ஜவ், முள்ளங்கி, வாழைத்தண்டு காய்கறி வாங்கிய இரண்டொரு நாளில் உபயோகப்படுத்திவிடுவது நல்லது. குறைந்த சூட்டில் சமையல்… நீர்க்காய்களில் அதிக வெப்பத்துக்குள்ளாகும்போது கரைந்துவிடும். அதனால் சமையல் செய்யும்போது தீயைக் குறைத்தே பயன்படுத்தவேண்டும். சமைக்க துவங்கியதில் இருந்து முடியும் வரை குறைந்த சூட்டில் சமைக்கும் போது நிச்சயம் அதன் முழு சுவையும் பொரியல், கூட்டில் உணரலாம். சிறியதாக நறுக்காதீர்! பொதுவாகவே சிறிது சிறிதாக நறுக்கி சேமித்து வைத்த காய்கறிகள்தான் அதிகளவு சத்து இழப்பு, பாக்டீரியா தாக்குதல்களுக்கு உள்ளாகும். நீர்க்காய்களை பெரிதாக நறுக்குவதால் சமைக்கும் போது மிகவும் சுவையை தரும். நீரில் வேகவைக்கும் காய்கறிகளை விட, நீராவியில் வேகவைக்கப்படும் காய்கறிகளில் சத்து இழப்பு மிகவும் குறைவாக இருக்கும். எனவே, நீராவி சமையல் ஷிப்பிகளை அதிகம் கிச்சனில் நடைமுறைப்படுத்துவது நல்லது” என்கிறார்.தொகுப்பு:- ஜெய காரிகைசூடுபடுத்தலாம், உறியில் கட்டி தொங்க விடலாம்!சில உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடலாம். புளி சேர்த்த குழம்பு வகைகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடலாம், கருவாட்டு குழம்பு, புளி சேர்த்த தொக்கு வகைகள், பூண்டு அதிகம் சேர்த்த குழம்பு போன்றவற்றை மூன்று முதல் ஒரு வாரம் வரை சூடுபடுத்தி சாப்பிடலாம், காலை மாலை என இரண்டு வேலையும் சூடுபடுத்த வேண்டும். அந்த காலத்தில் வீட்டில் உறி கட்டி தொங்க விட்டு இருப்பார்கள்.பூனையிடம் இருந்து காப்பதையும் தாண்டி நுண் உயிரிகள் எளிதில் அண்டாது. தயிர், புளிக்குழம்பு போன்ற உணவுகளை உறியில் வைக்கலாம். இந்த வகை குழம்புகளில் நீர்க்காய் கறிகள் துளியும் இருக்கக் கூடாது. நீர்க்காய்களில் சமைத்த எந்த உணவையும் ஒரு முறைக்கு மேல் சூடு படுத்தக்கூடாது.சுரைக்காய் கூட்டுதேவையானவைசுரைக்காய் – இரண்டு கப் பால் – ஒரு கப்வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)பச்சை மிளகாய் – நான்கு (நறுக்கியது)மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்நல்லெண்ணெய் – – நான்கு டீஸ்பூன்உப்பு – தேவைக்கேற்ப.செய்முறைகடாயில் குறைந்தளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.பிறகு, சுரைக்காய் குறைந்த சூட்டில் நீராவியில் வேக வைத்து. மூடிபோட்டு இறக்கி வைக்க வேண்டும். இறுதியாக பால் ஊற்றி கொதிக்கவிடவும், கூட்டு பதம் வந்தவுடன் இறக்கி பரிமாறவும் இறுதியாக நல்லெண்ணெய் கடுகு சேர்த்து தாளிப்பு செய்ய வேண்டும். புடலங்காய் கூட்டு தேவையானவைபாசிப்பருப்பு – கால் கப் சிறிய புடலங்காய் – 2 காய்ச்சிய பால் – கால் கப் மஞ்சள்தூள் – சிறிதளவு உப்பு – தேவைக்கு கடுகு, சீரகம் – சிறிதளவு உளுத்தம்பருப்பு – சிறிதளவுபச்சை மிளகாய் – 2வெங்காயம் – 1நெய் – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவுசெய்முறைபெரிய வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். புடலங்காயை வட்ட வடிவத்தில் துண்டுகளாக நறுக்குங்கள். கடாயில் தாராளமாக தண்ணீர் ஊற்றி பாசிப் பருப்பை வேக வையுங்கள். அதனுடன் புடலங்காய், வெங்காயம், மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறிவிடுங்கள். புடலங்காய் நன்கு வெந்ததும் கீழே இறக்கி சிறிது நேரம் ஆறவைத்துவிட்டு காய்ச்சிய பாலை ஊற்றி கிளறுங்கள். பின்னர் கடாயில் நெய் ஊற்றி அது உருகியதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கூட்டு கலவையில் கலந்து பரிமாறுங்கள். தாளிப்பு தவிர எண்ணெயில் வறுப்பதை கட்டாயம் தவிர்க்கவும் முழுதாக நீரில் தான் வேக வைக்க வேண்டும்….
The post உடலுக்கு உகந்த நீர்க் காய்கறிகள் appeared first on Dinakaran.