ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா தற்போது ‘கிங்டம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் மே மாதம் வெளியாக இருக்கும் நிலையில், அவர் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு ’ரவுடி ஜனார்த்தன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் இந்த படத்தின் நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க இருந்த நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் கிட்டத்தட்ட கமிட் ஆகிவிட்டதாக தெரிகிறது. ஏற்கனவே விஜய் தேவரகொண்டா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ’நடிகையர் திலகம்’ என்ற படத்தில் நடித்திருந்தாலும், அவர்கள் ஜோடியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது முதல் முறையாக விஜய் தேவரகொண்டா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க இருப்பதால், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

