×

அசையா பொருட்கள் அதிரும்; அம்மியே நகரும்!: ஜப்பானை காண்டாமிருக பலத்துடன் தாக்க தொடங்கிய ஹின்னம்னோர் சூறாவளிப் புயல்..!!

ஜப்பான்: ஜப்பானை தாக்க தொடங்கியுள்ள இந்த ஆண்டின் மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளி புயலால் ஒட்டுமொத்த ஜப்பான் மக்களும், கலக்கத்தில் உறைந்துள்ளனர். தென்சீன கடலில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு ஹின்னம்னோர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் நடப்பாண்டில் உலகளவில் உருவான சக்தி வாய்ந்த சூறாவளி புயலாக இருக்கும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஜப்பானின் ஒக்கினாவாவில் இருந்து கிழக்கே பலநூறு மைல் தூரத்தில் இருந்த இந்த ஹின்னம்னோர் சூறாவளி புயல், ஜப்பானின் தெற்கு பகுதிகளில் உள்ள ஹிஷிக்காக்கி உள்ளிட்ட தீவுகளை இன்று தாக்க தொடங்கியுள்ளது. இதனால் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. 108 கிலோ மீட்டர் வேகத்தில் வீச தொடங்கியுள்ள காற்று மணிக்கு 257 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் அசையா பொருட்கள் கூட அசையும் அளவிற்கு பாதிப்பு இருக்கும் என்று அமெரிக்காவின் புயல் முன்கணிப்பு மையம் எச்சரித்திருக்கிறது. ஹின்னம்னோர் புயல் காற்றின் வேகம் மிகவும் அதிகம் கொண்ட முதல் சூறாவளி புயலாக இருக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். சூறாவளி புயல் தாக்க தொடங்கியிருப்பதை தொடர்ந்து, ஒக்கினாவா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த புயல் வலுவடையும்போது மணிக்கு 3 செ.மீ. மழை கொட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. …

The post அசையா பொருட்கள் அதிரும்; அம்மியே நகரும்!: ஜப்பானை காண்டாமிருக பலத்துடன் தாக்க தொடங்கிய ஹின்னம்னோர் சூறாவளிப் புயல்..!! appeared first on Dinakaran.

Tags : Moving Move ,Hinnamnor ,Japan ,Move ,
× RELATED ஜப்பானில் வினோத திருவிழா… குழந்தைகளை...