×
Saravana Stores

உலகின் சுவைமிகு உணவுகளை ருசித்தவர்

ஆண்ட்ரூ சிம்மர்ன் யூ டியூப்பில் ஆண்ட்ரூ சிம்மர்னின் புட் பிஸார் நிகழ்ச்சி மில்லியன் வீயூஸ்சை தான்,. மக்களின் விருப்பமான உணவு நிகழ்ச்சியாக உள்ளது. டிராவல் ஹெச்டி சேனலில் ஒளிபரப்பாகி உலகப் புகழ்பெற்ற உணவு தொடர் உணவு சார்ந்து வந்த ஆவணப் படங்களில் மிக முக்கியமான பதிவு இது. பல நாடுகளின் உணவு பற்றி ஆவணப்படம் ஒவ்வொன்றும் 45 நிமிடங்கள் ஓடக்கூடியவை. மக்களின் உணவு வாழ்க்கைமுறை, பண்பாடு,உணவுக்கான வேட்டை, அந்த நாட்டின் முக்கிய இடங்களுடன் பிரத்யேக உணவு வகைகளைப் பற்றி சிம்மர்ன் விவரிக்கிறபோது நாமும் அங்கே உலவுகிற அனுபவம்.யார் இந்த ஆண்ட்ரூ சிம்மர்ன் ?மிகச் சுவையான உணவு, ரெஸ்ட்டாரண்ட் போன்றவற்றிற்காக அளிக்கப்படும் ஜேம்ஸ் பேர்டு விருதை இரண்டு முறை வென்றவர் ஆண்ட்ரூ சிம்மர்ன், நியூயார்க் நகரில் பிறந்தவர். தொலைக்காட்சி பிரபலம், சமையல் கலைஞர், எழுத்தாளர், ஆசிரியர் என பன்முகங்கள் இவருக்கு. உலகில் உணவுகள் பற்றி நன்கு தெரிந்த நிபுணர்களில் சிம்மர்ன் ஒருவர். 150 நாடுகளுக்குச் சென்று உணவுப் பழக்கம், பண்பாடு, பயணம் 360 டிகிரீ பார்வையை கொண்டு செல்வார். ஆட்டுக்கறியை காட்டுகிறார் என்றால், ஆடு மேயும் இடத்தில் தொடங்கிவிடுகின்றன காட்சிகள். அப்படியே மதுரை கறி தோசை, கோவில் கிடாவெட்டு, என எல்லாபக்கமும் கேமரா சென்று முடியும். உலகப் புகழ்பெற்ற சிம்மர்ன், மிக இளம் வயதிலேயே உணவுதான் வாழ்க்கை எனப் புரிந்துகொண்டார். பல ரெஸ்டாரண்டுகளைத் திறக்க ஆலோசகராக இருந்தவர், ஒருகட்டத்தில் குடிபோதைக்கு அடிமையாகி சாலைகளில் உறங்கும் அளவுக்குச் சென்றுவிட்டார். முழுநேர குடிகாரராக மாறியிருந்தார். நெருங்கிய நண்பரின் வழிகாட்டுதலில் மினிசோட்டாவில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து குடியில் இருந்து மீண்டார். பின்னர் சிம்மர்னின் வாழ்க்கையில் வசந்தம் மட்டுமே. நியூயார்க் கபேயில் சமையல்கலைஞராக சேர்ந்து, மிகக்குறுகிய ஆண்டுகளில் உயர் பொறுப்புக்கு வந்தார். மெல்ல மீடியாவுக்கு நகர்ந்தவர், உள்ளூர் பத்திரிகைகளில் உணவு பற்றி எழுதத் தொடங்கினார். வானொலி, தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் என ஆண்ட்ரூ சிம்மர்னின் பெயர் உணவுலகில் உச்சம் சென்று பிரபலமானது. டிராவல் சேனலின் புட் பிஸார் நிகழ்ச்சி அவரது வாழ்க்கையை உச்சத்திற்கு கொண்டு சென்றது. உலகம் முழுவதும் அலைந்து பெற்ற அனுபவத்தை அமெரிக்காவின் ஸ்டேடியங்கள், வங்கிகள் போன்ற பொதுமக்கள் கூடுமிடங்களில் எங்கும் செல்லும் “ஆண்ட்ரூ சிம்மர்ன் கேண்டீன்” தொடங்கி சுவையான உணவைப் பரிமாறினார். புட் அண்ட் வைன், டெல்டா ஸ்கை போன்ற உணவுப்பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். டிவி ஷோக்கள், சமையல் நூல்கள், விருதுகள், பத்திரிகை எழுத்து, இணையம் வழியாக சமையல் கலை என ஆண்ட்ரூ சிம்மர்னின் உலகம் பரந்து விரிந்திருக்கிறது. வீட்டுக்குப் போனால் அவர் படித்துக்கொண்டோ, சமைத்துக்கொண்டோ அல்லது எலக்ட்ரிக் கிதாரை இசைத்துக்கொண்டோ இருப்பார்.தொகுப்பு:- காரிகை

The post உலகின் சுவைமிகு உணவுகளை ருசித்தவர் appeared first on Dinakaran.

Tags : Andrew Simmern ,
× RELATED சொல்லிட்டாங்க…