×

சோனியா காந்தி தாயார் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லோ மைனோ, இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 90.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, கடந்த சில மாதங்களாக முதுமை காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை பார்ப்பதற்காக சோனியா, ராகுல், பிரியங்கா கடந்த 23ம் தேதி டெல்லியில் இருந்து இத்தாலி புறப்பட்டு சென்றனர். இந்நிலையில், அவர் இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இத்தகவலை காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில், ‘காங்கிரஸ் தலைவர் சோனியாவின் தாயார் பாவ்லா மைனோ இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் கடந்த 27ம் தேதி காலமானார். அவரது இறுதி சடங்குகள் நேற்று (நேற்று முன்தினம்) நடந்தது,’ என்று கூறியுள்ளார்.பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோவின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். சோனியா காந்தியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்,’ என்று தெரிவித்துள்ளார்….

The post சோனியா காந்தி தாயார் மறைவு: பிரதமர் மோடி இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Sonia Gandhi ,PM Modi ,New Delhi ,Paolo Maino ,Congress ,Italy ,
× RELATED மாபெரும் வெற்றியை தர வேண்டும்;...