×

மாபெரும் வெற்றியை தர வேண்டும்; ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பாற்ற அனைவரும் வாக்களியுங்கள்: சோனியா காந்தி அறிவுறுத்தல்

புதுடெல்லி: டெல்லியின் 7 மக்களவை தொகுதிகளுக்கும் நாளை ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில், “பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, அரசியல் சாசன அமைப்புகள் மீதான தாக்குதல் போன்ற பிரச்னைகளுக்கு இடையே மக்களவை தேர்தல் நடக்கிறது.

இந்த பிரச்னைகளில் இருந்து விடுபட அனைவரும் நிச்சயம் வாக்களியுங்கள். உங்களின் ஒவ்வொரு வாக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கும், மகளிருக்கு அதிகாரம் அளிக்கும், ஒளிமயமான சமத்துவம் கொண்ட புதிய இந்தியாவை உருவாக்கும். ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்ற டெல்லியின் 7 தொகுதிகளிலும் காங்கிரஸ், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வீர்கள்” என்று வலியுறுத்தி உள்ளார்.

 

The post மாபெரும் வெற்றியை தர வேண்டும்; ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பாற்ற அனைவரும் வாக்களியுங்கள்: சோனியா காந்தி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sonia Gandhi ,New Delhi ,Lok Sabha ,Delhi ,Congress ,president ,
× RELATED தேர்தல் முடிவு மோடிக்கு கிடைத்த தார்மீக தோல்வி: சோனியாகாந்தி பேச்சு