×

எலான் மஸ்க் புதிய புகார்; டிவிட்டரில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன

ஆஸ்டின்: புதிதாக பாதுகாப்பு காரணங்களை காட்டி டிவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து எலான் மஸ்க் வெளியேற இருப்பதாக தெரிய வந்துள்ளது. பிரபல சமூக ஊடகமான டிவிட்டரை உலகின் மிகப் பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் ரூ.3.3 லட்சம் கோடிக்கு வாங்க கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்தார். அதன் பிறகு, டிவிட்டரில் உள்ள பல லட்சம் போலி கணக்குகளின் விவரங்களை கேட்டார். டிவிட்டர் நிர்வாகம் இதனை முழுமையாக தர மறுத்ததால், டிவிட்டரை வாங்கும் முடிவில் இருந்து மஸ்க் பின் வாங்கினார். இதையடுத்து, அவர் மீது டிவிட்டர் நிர்வாகம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து அவர் மீது வழக்கு தொடர்ந்தது. இதற்கிடையே, டிவிட்டரின் முன்னாள் தலைமை பாதுகாப்பு அதிகாரி பீட்டர் ஜாட்கோ, ‘‘டிவிட்டர் நிறுவனம் தனது மோசமான இணைய பாதுகாப்பு, தவறான தகவல்களை பரப்பும் போலி கணக்குகளை ஒழித்து கட்டும் முயற்சியில் தனது பயனர்களை தவறாக வழிநடத்தியது,’’என்று கூறியிருந்தார். இதை பயன்படுத்திக் கொண்ட மஸ்க், ஜாட்கோ கூறிய பாதுகாப்பு குறைபாடுகளை காரணமாக காட்டி, டிவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதற்கு முயற்சித்துள்ளார். இது குறித்து டிவிட்டரின் தலைமை சட்ட அதிகாரி விஜய காடேவுக்கு மஸ்க் தரப்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில், ‘டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவில், ஜூலை முடிவு அறிவிப்பு எக்காரணத்திற்காகவும் செல்லாது என்று தீர்மானிக்கப்பட்டால், ஒப்பந்தத்தை முடிக்க ஜாட்கோவின் குற்றச்சாட்டுகள் எலான் மஸ்கிற்கு கூடுதல் காரணங்களாக இருக்கும்’ என கூறப்பட்டுள்ளது….

The post எலான் மஸ்க் புதிய புகார்; டிவிட்டரில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன appeared first on Dinakaran.

Tags : Elon Musk ,Twitter ,Austin ,Dinakaran ,
× RELATED இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்