×

இந்தியா, சீனா, ரஷ்யா கூட்டு போர் பயிற்சி; நாளை மறுதினம் தொடக்கம்

மாஸ்கோ: இந்தியா சீனா ரஷ்யா உள்பட பல்வேறு நாடுகள் பங்கேற்கும் வோஸ்டோக் கூட்டு ராணுவ பயிற்சி வரும் 1ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரை நடைபெற இருப்பதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ரஷ்யாவின் கிழக்கு ராணுவப் பிரிவின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டு ராணுவப் போர் பயிற்சியில் பல்வேறு விதமான போர் உத்திகள் குறித்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. செப்டம்பர் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை, எட்டு நாட்கள் நடைபெறும் இந்த போர் பயிற்சி ஜப்பான், ஓகோட்ஸ்க் கடல் பகுதிகளில் 7 சுற்றுகளாக நடத்தப்படும். இதில் 140 போர் விமானங்கள், 60 போர் கப்பல்கள், துப்பாக்கி பொருத்திய படகுகள், துணைப்படகுகள் உள்ளிட்ட 5,000 ராணுவ தளவாடங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. இந்த பயிற்சியில் இந்தியா, சீனா, லாவோஸ், மங்கோலியா, நிகரகுவா, சிரியா மற்றும் முன்னாள் சோவியத் நாடுகள் உள்பட பல்வேறு நாடுகள் பங்கேற்க இருக்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post இந்தியா, சீனா, ரஷ்யா கூட்டு போர் பயிற்சி; நாளை மறுதினம் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : India ,China ,Russia ,Moscow ,Vostok Joint Military Training ,
× RELATED இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்