×

ஒருதலைக் காதல் விவகாரம் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்: ஜார்க்கண்ட்டில் பதற்றம்

தும்கா: ஜார்கண்டில் ஒருதலைக் காதல் விவகாரத்தால் மாணவி மீது பெட்ரோல் வீசிக் கொன்ற காதலனை போலீசார் கைது செய்தனர். அங்கு தொடர் பதற்றம் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தும்கா அடுத்த ஜருவாடியை சேர்ந்த 16 வயதுடைய மாணவி அங்கிதா என்பவரை, ஷாருக் என்ற இளைஞன் காதலித்து வந்துள்ளான். இதையறிந்த அங்கிதா, ஷாருக்கை திட்டி அனுப்பியுள்ளார். ஆவேசமடைந்த அவன் கடந்த 23ம் தேதி வீட்டில் இருந்த அங்கிதாவின் மீது ஜன்னல் வழியாக பெட்ரோலை வீசி தீவைத்துவிட்டு தப்பினான்.அங்கிதா உடல் முழுவதும் தீப்பற்றியதால் அலறித் துடித்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ரிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த 4 நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும் அங்கிதாவை காப்பாற்ற முடியவில்லை. 95 சதவீதம் அளவிற்கு தீக்காயம் ஏற்பட்டதால், அவரை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறினர். அங்கிதாவின் மரணத்தால், இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டங்களை நடத்தினர். அதையடுத்து நேற்று முன்தினம் முதல் தும்கா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட ஷாருக்கை போலீசார் கைது செய்து தும்கா சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால் தும்கா பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இது குறித்து பேசிய மாநில பாஜ துணை தலைவரும் முன்னாள் முதல்வருமான ரகுபர் தாஸ், ‘‘மாணவி எரித்து கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக முதல்வர் இதுவரை மவுனம் காத்து வருகிறார். கடந்த 32 மாதங்களில் மாநிலத்தில் 5,000 பாலியல் வழக்குகள் பதிவாகி உள்ளன. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை,’’ என்று குற்றம் சாட்டினார். …

The post ஒருதலைக் காதல் விவகாரம் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்: ஜார்க்கண்ட்டில் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Dumka ,
× RELATED பணமோசடி வழக்கு ஜார்க்கண்ட் அமைச்சரிடம் ஈடி விசாரணை