மும்பை: இந்த நிதியாண்டில் ரூ.120 கோடி வரி செலுத்தி சினிமா பிரபலங்களில் முதலிடம் பிடித்திருக்கிறார் அமிதாப் பச்சன. பாலிவுட்டில் ஷாருக்கான், அக்ஷய் குமார் இடையேதான் அதிக வரி செலுத்துவோர் யார் என்பதில் போட்டி நிலவும். கடந்த ஓராண்டாக அக்ஷய்குமாரின் படங்கள் தோல்வி அடைந்து, சம்பளமும் குறைந்தது. இதனால் கடந்த நிதியாண்டில் ஷாருக்கான் அதிக வரி செலுத்தினார். இந்நிலையில் இந்த முறை 2024-25ல் அமிதாப் பச்சன், ரூ.120 கோடி வரி செலுத்தி முதலிடம் பிடித்திருக்கிறார். அவர் இந்த நிதியாண்டில் ரூ.350 கோடி வருவாயை ஈட்டியிருக்கிறார். இதற்காகவே இவ்வளவு பெரும் தொகையை அமிதாப் பச்சன் வரியாக செலுத்தியுள்ளார். இந்த நிதியாண்டில் ஷாருக்கான் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் ரூ.92 கோடி வரி செலுத்தியிருக்கிறார். அமிதாப் பச்சன், தனது படங்கள், பிராண்ட் விளம்பரங்கள் மற்றும் கவுன்பனேகா கரோர்பதி நிகழ்ச்சி ஆகியவற்றின் மூலம் ரூ.350 கோடியை வருமானமாக ஈட்டியிருக்கிறார். 81 வயதிலும் இந்திய சினிமாவில் கலக்கி வரும் அமிதாப் பச்சனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வாழ்த்தி வருகின்றனர்.

