×

மெடிக்கல் கிரைம் திரில்லர் ட்ராமா

சென்னை: டர்ம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எஸ்.உமா மகேஸ்வரி தயாரித்துள்ள ‘ட்ராமா’ என்ற படம், வரும் 21ம் தேதி திரைக்கு வருகிறது. விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, ரமா, நமோ நாராயணன், பிரதீப் கே.விஜயன், ‘ஸ்மைல்’ செல்வா, மதனகோபால் நடித்துள்ளனர். அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய, ராஜ் பிரதாப் இசை அமைத்துள்ளார். மெடிக்கல் கிரைம் திரில்லரான இப்படத்தை ஆல்பா 3 எண்டர்டெயின்மெண்ட் வெளியிடுகிறது. படம் குறித்து இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன் கூறுகையில், ‘ட்ராமா என்றால் ‘பாதிப்பு’ என்று அர்த்தம். ஆந்தாலஜி மூவியான இதில் மூன்று கதைகள், மூன்று களங்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்தும் இன்டர்லிங்க் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். இது ரசிகர்களுக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். முதலில் இதை பைலட் மூவியாக தொடங்கினோம். அது சிறப்பாக இருந்ததை தொடர்ந்து திரைப்படமாக உருவாக்கப்பட்டது’ என்றார்.

Tags : Chennai ,S. Uma Maheshwari ,Durm Productions ,Vivek Prasanna ,Poornima Ravi ,Anand Nag ,Chandini Tamilarasan ,Nizhalgal Ravi ,Marimuthu ,Pradosh ,Vaiyapuri ,Rama ,Namo ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்