- எஸ்.கே
- கல்யாணி பிரியதர்ஷன்
- சுதா
- கொங்கரா
- சிவகார்த்திகேயன்
- ஸ்ரீ லீலா
- பிரபு
- சிவகார்த்திகேயன் ஜடி
- பிரியதர்ஷனின்
- லிஸ்ஸி
- வெங்கட்
சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார், சிவகார்த்திகேயன். இதில் அவரது ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு எழுதி இயக்குகிறார். சயின்ஸ் பிக்ஷனுடன் கூடிய டைம் டிராவல் கதையாக உருவாகும் இதில், சிவகார்த்திகேயன் ேஜாடியாக மீண்டும் கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விவாகரத்து மூலம் பிரிந்துவிட்ட இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிசியின் மகளான கல்யாணி பிரியதர்ஷன், தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘ஹீரோ’ என்ற படத்தில் அறிமுகமானார். வெங்கட் பிரபு இயக்கிய ‘மாநாடு’ என்ற படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். எனவே, மீண்டும் அவரை இயக்க வெங்கட் பிரபுவும், மீண்டும் அவருக்கு ஜோடியாக நடிக்க சிவகார்த்திகேயனும் அதிக ஆர்வம் காட்டினர்.
இந்நிலையில், இந்த மூவர் கூட்டணி மீண்டும் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ என்ற பான் இந்தியா படத்தில் சூப்பர் வுமன் கேரக்டரில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான கல்யாணி பிரியதர்ஷன், தமிழில் திரவியம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். முன்னதாக, ரவி மோகனுடன் இணைந்து நடித்த ‘ஜீனி’ என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். நடிகரும், ‘டாணாக்காரன்’ படத்தின் இயக்குனரும், ‘சிறை’ படத்தின் கதாசிரியருமான தமிழ் இயக்கும் ‘மார்ஷல்’ என்ற படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார்.
