சென்னை: 2008ம் ஆண்டு இளையராஜாவின் ராஜா ஒன் மேன் ஷோ நிகழ்ச்சியில் கீபோர்டு வாசித்தார் ஜோகன் சிவனேஷ். கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி இசையமைப்பாளர் ஆகிவிட்டார். 2012ம் ஆண்டு முதல்முறையாக ‘கொள்ளைக்காரன்’ படத்துக்காக இசையமைத்திருந்தார். இதை தொடர்ந்து இவர் இசையமைத்த ‘மெட்ரோ’ படம் ஜோகனுக்கு திரையுலகில் பெரும் வரவேற்பையும் ரசிகர்களிடம் தனி இடத்தையும் தந்தது. இப்படங்களை தொடர்ந்து ‘ஆள்’, ‘உரு’, ‘அகடு’, ‘ஆயிரம் பொற்காசுகள்’, ‘ஒயிட் ரோஸ்’, கன்னட படமான ‘கப்பட்டி’ போன்ற படங்களும் கடந்த வாரம் வெளியான ‘ராபர்’ படத்துக்கும் இசையமைத்துள்ளார். ராபர் படத்தில் இவரது பின்னணி இசை படம் பார்த்த ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து பேசப்படுகிறது. ‘‘பின்னணி இசையில் புதுமைகள் செய்வதே நோக்கம்’’ என்ற ஜோகன் சிவனேஷ், தமிழில் புது படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
