×

ரோஜா மல்லி கனகாம்பரம்: இயக்குனர் கே.பி.ஜெகன் ஹீரோ ஆனார்

சென்னை: விஜய் நடித்த ‘புதிய கீதை’ மற்றும் ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களை இயக்கிய கே.பி.ஜெகன், தற்போது எழுதி இயக்கி ஹீரோவாக நடிக்கும் படம், ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’. குடும்பங்கள் கொண்டாடிய ‘மாயாண்டி குடும்பத்தார்’ என்ற வெற்றிப் படத்தை தயாரித்திருந்த யுனைடெட் ஆர்ட்ஸ் சார்பில் எஸ்.கே.செல்வகுமார் தயாரிக்கும் இப்படத்தின் தொடக்க விழா மற்றும் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு, திருச்செந்தூர் அருகிலுள்ள சாஸ்தா கோயிலில் நடந்தது. இதர விவரங்கள் விரைவில் வெளியாகிறது.

படம் குறித்து கே.பி.ஜெகன் கூறுகையில், ‘என் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி கதை எழுதியுள்ளேன். இதற்கு முன்பு பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நான், இதில் முதல்முறையாக கதையின் நாயகனாக நடிக்கிறேன். அனைவரையும் கவரும் வகையில் படம் உருவாகிறது’ என்றார்.

Tags : K.P. Jagan ,Chennai ,Vijay ,
× RELATED துப்பாக்கி, பில்லா 2 பட வில்லன் வித்யூத் ஜம்வால் நிர்வாண ‘போஸ்’