×

நடிகை பிந்து கோஷ் மரணம்

சென்னை: 1980களில் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த காமெடி நடிகைகளில் ஒருவர் பிந்து கோஷ். விமலா என்ற தனது பெயரை சினிமாவிற்காக பிந்து கோஷ் என மாற்றிக்கொண்டார். தனது பருமனான உடல் வாகு மற்றும் தனித்துவமான உடல் மொழியால் பிரபலமானார். கமல்ஹாசனுடன் ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். நடிப்பு மட்டுமல்லாமல் மேடை நாடகம், நடன கலைஞராகவும் இருந்தவர். கவுண்டமணி, செந்திலுடன் நடித்த காமெடி காட்சிகள் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்தவர். தமிழில் ‘கோழி கூவுது’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி ‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், பிரபு உள்ளிட்டோருடன் நடித்துள்ளார். சமீப காலமாக உடல்நலக் குறைவால் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த பிந்து கோஷ், சென்னை அரசு பொது மருத்துவமனையில் நேற்று காலமானார்.

Tags : Bindu Ghosh ,Chennai ,Vimala ,Kamal Haasan… ,
× RELATED ஜனவரி 16ல் ஜூலி காதல் திருமணம்