×

குடிபோதையில் அம்மாவ அடிக்கிறாரு எங்கப்பாவை புடிச்சுஜெயில்ல போடுங்க: போலீசில் 9 வயது மகன் ஆவேசம்

திருமலை: தெலங்கானா மாநிலம், ராஜண்ணா- சிர்சில்லா பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா. இவரது மனைவி தீபிகா. தம்பதிக்கு சுங்கபாக பரத் (9) என்ற மகன், ஒரு மகள் உள்ளனர். பரத் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறான். நேற்று காலை பரத் தனது வீட்டில் இருந்து 1 கிமீ தூரத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு நடந்தே சென்று, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்வரலுவை சந்தித்தான். அவரிடம், ‘குடிபோதையில் எங்கம்மாவை அப்பா அடிக்கிறார். அம்மாவை காப்பாத்த போனால் என்னையும் அடிக்கிறார். எங்கப்பாவை தூக்கி ஜெயில்ல போடுங்க சார்…’ என கூறினான். இதைக் கேட்ட எஸ்ஐ, பரத்தின் பெற்றோரை அழைத்து மனநல ஆலோசனை வழங்கினார். பாலகிருஷ்ணாவையும் எச்சரித்தார். பின்னர், தம்பதி இருவரையும் பரத் மகிழ்ச்சியாக வீட்டுக்கு அழைத்து சென்றான். சிறுவனின் இந்த தைரியத்துக்கு பாராட்டுகள் குவிகிறது….

The post குடிபோதையில் அம்மாவ அடிக்கிறாரு எங்கப்பாவை புடிச்சுஜெயில்ல போடுங்க: போலீசில் 9 வயது மகன் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Balakrishna ,Rajanna-Sirchilla ,Telangana ,Deepika ,Bharat ,
× RELATED வேங்கடவனை நினைக்க வினைகள் அகலும்!