×

பிரபல பைக் திருடன் கைது: 13 பைக்குகள் பறிமுதல்

தண்டையார்பேட்டை: சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கவுசல்யா (25) என்ற மாணவி மருத்துவம் படித்து வருகின்றார். இவர் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி தனது மொபட்டை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டவர் பகுதியில் நிறுத்தியபோது திருடுபோனது. இதுகுறித்து ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனிடையே, முகப்பேர் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை (50) என்பவர் கடந்த 7ம் தேதி தனது பைக் திருடுபோனது என்று போலீசில் புகார் அளித்து இருந்தார். அதன்பேரில், போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், ஒருவரை கைது செய்தனர். விசாரணையில்,  சேப்பாக்கம் ஆதாம் தெருவை சேர்ந்த கணேஷ் (23) என்பதும், இவர்தான் மேற்கண்ட இருவரின் பைக் மற்றும் மொப்ட்டை திருடியதும், இதுமட்டுமின்றி சென்னையில் பல இடங்களில் பைக்குகளை திருடியதும் தெரிந்தது. அவரிடம் இருந்து 13 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post பிரபல பைக் திருடன் கைது: 13 பைக்குகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Kausalya ,Chennai Government General Hospital Medical College ,Dinakaran ,
× RELATED மாநகர பேருந்து படியில் பயணம்; ‘உள்ளே...