×

60 ஆண்டுக்கு பின் நிரம்பிய ஏரி ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி

மேச்சேரி: தாரமங்கலத்தில் உள்ள பெரிய ஏரி 60 ஆண்டுக்கு பின் நிரம்பிய நிலையில், ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் மாற்று இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தாரமங்கலத்தில் உள்ள பெரிய ஏரி 155 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தின் கீழ், இந்த ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் 60 ஆண்டுக்கு பின்பு நிரம்பியுள்ளது. இதனால், மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், ஏரி கோடி விழும் இடத்திற்கு சென்று பெருக்கெடுத்து வெளியேறிய தண்ணீரில் மலர் தூவினர். ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், கரையோரத்தில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த 60 ஆண்டுக்கு பின்பு ஏரி நிரம்புவதால் மகிழ்ச்சியாக உள்ளது. பெரிய ஏரி நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், சுற்றுப்புற பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது,’ என்றனர்….

The post 60 ஆண்டுக்கு பின் நிரம்பிய ஏரி ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Mechery ,Periya Lake ,Dharamangalam ,
× RELATED அதிமுக தெருமுனை பிரசார கூட்டம்