×

திருமண வரமருளும் சிறப்பான ஸ்லோகங்கள்

வராஹர் ஸ்லோகம் (திருமணம் கைகூடி மங்களங்கள் பெருக)

ய: ஸ்வாமீ ஸரஸஸ்தடே விஹரதோ
ஸ்ரீஸ்வாமி நாம்ன: ஸதா
ஸௌவர்ணாலய மண்டிதோ விதிமுகைர்பர்ஹிர்முகை: ஸேவித:
ய: சத்ரூன் ஹனயன்னிஜானவதி ச ஸ்ரீபூவராஹாத்மக:
ஸ்ரீமத் வேங்கட பூதேந்த்ரரமண: குர்யாத்தரிர் மங்களம்.
 - மங்கள ஸ்லோகம்


பொதுப்பொருள்: திருப்பதி-திருமலையில் உள்ள ஸ்வாமி புஷ்கரணி என்னும் குளத்தின் கரையில் வீற்றிருக்கிறார் வராஹமூர்த்தி. மஹாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் இவர். தங்கமயமான கோயிலை அலங்கரித்துக் கொண்டிருப்பவரும், பிரம்மா முதலிய தேவர்களால் வணங்கப்படுகிறவரும், பகைவர்களிடமிருந்து கைதூக்கி விடுபவரும், யக்ஞவராஹமூர்த்தியாய் விளங்குபவருமான, வெங்கடாஜலபதிக்கு இடமளித்த திருமாலான வராஹர் எனக்கு எல்லா மங்களங்களையும் அருளுமாறு வேண்டிக்கொள்கிறேன். காலை அல்லது மாலை நேரத்தில் திருமணமாக வேண்டிய இளைஞர்களும், கன்னிகைகளும் இத்துதியை பாராயணம் செய்தால், வராஹ மூர்த்தியின் திருவருளால் அவரவர்களுக்கு திருமணம் கை கூடும். மங்களங்கள் பெருகும்.

ஆண்டாள் ஸ்லோகம் (நல்ல மணமகன் கிடைக்க)

ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம்
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவான்யாம்
கோதாம் அனஸ்ய சரண:சரணம் ப்ரபத்யே
-ஸ்ரீகோதாஸ்துதி


பொதுப் பொருள்: கற்பகவிருட்சத்தில் பூக்கும் மலர் போல விஷ்ணு சித்தரின் குலத்தில் அவதரித்த ஆண்டாளே நமஸ்காரம். ஹரிசந்தன மரத்தின் கீழ் வாசம் செய்யும் ரங்கராஜனாகிய திருமாலின் மனம் கவர்ந்தவளே நமஸ்காரம். பூமிதேவியின் அம்சத்தைக் கொண்ட தாயே, உன் மனம் போல் மாங்கல்யம் அமைந்தாற்போன்று எனக்கும் அருள் செய்வாயாக. மகாலட்சுமியின் அம்சத்தைக் கொண்ட அன்னையே! என் வாழ்க்கையில் மங்களமும், வளமும் பெருக வரமருள்வாய் அம்மா.

இத்துதியை பூர நட்சத்திர தினங்களில் பாராயணம் செய்து வந்தால் ஆண்டாளுக்கு ரங்கநாதர் மணமகனாகக் கிடைத்தது போல் கன்னியர் மனம் விரும்பும் மணாளனைக் கைபிடிப்பர். செல்வச் செழிப்பும் ஏற்படும்.

திருமணத் தடைகள் நீக்கும் தேவி ஸ்லோகம்

காத்யாயனி! மஹாமாயே! மஹாயோகின்யதீஸ்வரி!
நந்தகோபஸுதம் தேவி பதிம்மே குருதே நமஹ:
 -  ஆண்டாள் சொன்ன தேவி துதி.


பொதுப் பொருள்: அனைவரையும் காத்தருளும் கருணைமிக்க காத்யாயனி தேவியே உனக்கு நமஸ்காரம். எல்லாவகை மாயைகளையும் பொருளுணர்த்தி விளங்க வைப்பவளே உனக்கு நமஸ்காரம். மகத்தான யோக சித்திகளை அடைந்தவளே உனக்கு நமஸ்காரம். நந்தகோபருடைய புத்திரரான கண்ணனே எனக்குக் கணவனாக அமைய வேண்டும். அந்த பாக்கியத்தை தேவி நீ எனக்கு அருள்வாயாக.கண்ணனை ஆண்டாள் கணவராக அடைய உதவிய இந்த மகத்தான ஸ்லோகத்தை, திருமணத்திற்காகக் காத்திருக்கும் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் சொல்லலாம். தம் மனதில் தாம் கணவனாக வரித்திருக்கும் ஆண்மகனையே தன் வாழ்க்கைத் துணையாகப் பெறுவதும் சாத்தியமாகும். முக்கியமாக ஆண்டாள் அவதரித்த நட்சத்திர தினமான பூர நட்சத்திரத்தன்று இத்துதியை ஜபம் செய்தால் கண்ணனைப் போன்ற தோற்றப்பொலிவு, புத்திசாலித்தனம் பொருந்திய கணவர் அமைவார்.

ஆண்கள் திருமணமாக கூற வேண்டிய துதி

கந்தர்வராஜோ விஸ்வாவஸு
மமாபிலிஷித கன்யாம் ப்ரயச்ச ஸ்வாஹா


கந்தர்வர்களுக்கு அரசனான விஸ்வாவஸுவே: என் மனதிற்குப் பிடித்த கன்னிப் பெண்ணை எனக்கு மனைவியாகத் தந்தருள்புரிய வேண்டும். மிகவும் சக்தி வாய்ந்த இந்தத் துதியை முழு நம்பிக்கையுடன் 48 நாட்கள் பாராயணம் செய்து வந்தால் நல்ல மணமகள் கிடைப்பாள்.

விரைவில் திருமணம் நிச்சயமாக

தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ண
ருக்மிணீ ப்ரியவல்லப
விவாஹம் தேஹிமே ஸீக்ரம்
வாஸுதேவ நமோஸ்துதே


இத்துதியை திருமணம் ஆக வேண்டிய ஆடவரும், கன்னியரும் தினமும் பாராயணம் செய்து வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும்.

திருமணம் சிறப்பாக  நடந்திட

ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி யோகீஸ்வரி யோக பயங்கரி
ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய முக ஹ்ருதயம் மம வஸமா-கர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா
- ஸ்வயம்வரா பார்வதி மூல மந்திரம்


பொதுப் பொருள்: ஹ்ரீம் எனும் பீஜத்தில் உறைபவளே, யோகினியே, யோகேஸ்வரியே, சகல ஜீவன்களும் எனக்கு வசமாக அருள்புரிவாய் அம்மா. (இத்துதி, தேவி வழிபாட்டில் ஸ்வயம்வர கல்யாணி என்று போற்றப்படுகிறது. ருக்மிணி கிருஷ்ணனை இத்துதியை ஜபித்தே மணந்தாள். பார்வதியாக அவதரித்த போது உமாதேவி இத்துதியை பராசக்தியைக் குறித்து துதித்தே ஈசனை மணந்தாள். இத்துதியை வெள்ளிக்கிழமைகளிலும் அஷ்டமி தினத்தன்றும் குறிப்பாக பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் தடைகள் நீங்கி, திருமணம் மகிழ்ச்சி பொங்க நடைபெறும்.)

Tags : Wedding Grooms ,
× RELATED கன்னியா ராசி முதலாளி மற்றும் தொழிலாளி