×

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

செங்கல்பட்டு: கோவிலம்பாக்கம் அடுத்த சுண்ணாம்பு குளத்தூரை சேர்ந்தவர் பிரசாந்த் (26).  தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2017ம் இண்டு ஜூலை மாதம் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை வீடு புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதில், பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிறுமி  சேர்க்கப்பட்டாள். இதுகுறித்து  சிறுமியின் பெற்றோர் மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், பிரசாந்த் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு போக்சோ சட்டத்தின் படி ஒரு ஆயுள் தண்டனையும், கொலை முயற்சியில்  ஈடுபட்டதால் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அத்துமீறி வீடு புகுந்து தாக்குதலில் ஈடுட்டதாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை ஏக காலத்தில் அனுபவிக்கவேண்டும்  என  செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தமிழரசி தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில், ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இதனையடுத்து பிரசாந்தை  போலீசார் பலத்த  பாதுகாப்புடன் புழல் சிறையில் அடைத்தனர்….

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Prashanth ,Kulathur ,Kovilambakkam ,
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை