×

பதவிக்காக எல்லாவற்றையும் இழந்து செயல்படும் கட்சி திமுக அல்ல; திருச்சி சிவா எம்பி பேச்சு

அம்பத்தூர்: அம்பத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில், சுடரொளி 11 கலைஞர் கொள்கை அரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூரில் நேற்று நடந்தது. தெற்கு பகுதி திமுக செயலாளர் ராஜகோபால் தலைமை வகித்தார். இதில், டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பேசினர். தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வேந்திரன் பேசுகையில், ‘தமிழை வளர்த்த கலைஞர், தமிழோடு வளர்ந்தார். ஒவ்வொருவரும் தமிழுக்கு பல்வேறு அங்கீகாரத்தை வாங்கி தந்த நிலையில் செம்மொழி அங்கீகாரத்தை வாங்கி தந்தவர் கலைஞர். 16 வயதில் இருந்து 96 வயது வரை மொழி கொள்கையை மாற்றி கொள்ளாதவர். இந்தியை எதிர்த்து தமிழ் மொழியை வளர்த்தவர். திமுகவிற்கும் பாஜவிற்கும் அரசியல் பகை மட்டுமல்லாமல் கொள்கை பகையும் உண்டு. தமிழகம் கொள்கையால் ஊரிப்போனதால் முதல்வர் மு.க.ஸ்டாலினை தவிர வேறு எந்த கட்சியாலும் முதல்வராக வரமுடியாது’  என்றார். திருச்சி சிவா எம்பி பேசுகையில், ‘அரசு செய்கின்ற காரியங்களை எடுத்துரைப்பது பொதுக்கூட்டங்கள்தான். இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் பொதுக்கூட்டங்கள் வாயிலாக பணிகள் குறித்து பேசுவது திமுகதான். உடல்நலம் குன்றிய நிலையிலும் தமிழக அரசியல் கலைஞரை பற்றி பேசியது. தற்போது அவர் இல்லை என்ற நிலையில் இந்தியாவே கலைஞரை பற்றி பேசுகிறது. கடைக்கோடி தொண்டனை நம்பிதான் கட்சிக்காக உழைத்தார். உடன்பிறப்பே என்று ஆண், பெண் இருபாலரையும் ஒன்றிணைத்து அழைத்தவர் கலைஞர். எந்த நிலையிலும் எங்கள் நிலையை மாற்றமாட்டோம் என்ற வழியில் முதல்வர் ஸ்டாலின்  செயல்பட்டு வருகிறார். ஆட்சி பொறுப்பு என்பதற்காக கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத கட்சி திமுக. பதவிக்காக எல்லாவற்றையும் இழந்துவிட்டு செயல்படும் கட்சி திமுக அல்ல. கலைஞரின் ஆட்சியில்தான் மூடப்பட்டிருந்த கோயில் திறக்கப்பட்டு குடமுழுக்கு, தேரோட்டம் நடத்தப்பட்டது. அனைத்து மதத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் உள்ளிட்ட செயல்கள் நடந்து வருகிறது. கலைஞர் பாதைதான் எங்களின் வழி’ என்றார்.நிகழ்ச்சியில், அம்பத்தூர்  எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், தாயகம் கவி எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்….

The post பதவிக்காக எல்லாவற்றையும் இழந்து செயல்படும் கட்சி திமுக அல்ல; திருச்சி சிவா எம்பி பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK ,Trichy Siva ,Ambattur ,Sudaroli ,artist ,Dinakaran ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்